tamilnadu

img

தமிழகத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஆசிய வங்கி நிதியுதவி

சென்னை,பிப்.10- தமிழகத்தில் 4 பெரிய திட்டங்களுக்கு நடப்பாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய உட்கட்டமைப்பு முத லீடு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. காவிரி பாசன கட்டமைப்புகளை மேம்ப டுத்த 17 ஆயிரத்து 942 கோடியும், சென்னை,  காஞ்சிபுரம், திருவள்ளூரில் நிரந்தர வெள்ளத் தடுப்பு திட்டத்திற்காக 2 ஆயிரத்து  400 கோடியும், சென்னையில் சுற்றுவட்ட சாலை இரண்டாவது, மூன்றாவது கட்டமும்,  சென்னை விமான நிலையம் முதல் கிளாம்  பாக்கம் வரை 15 புள்ளி 3 கிலோ மீட்டர் தூரம்  மெட்ரோ ரயில் நீட்டிப்பு உள்ளிட்ட திட்டங்  களை செயல்படுத்த 6 ஆயிரத்து 175 கோடி  ரூபாயும் கேட்டு ஆசிய உட்கட்டமைப்பு முத லீடு வங்கியிடம் கடனுதவி கேட்டு அறிக்கை  தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில் இந்த திட்டத்துக்கு, அந்த  கொள்கை அளவில் ஒப்புதல் அளித்து இருப்  பதாகக் கூறப்படுகிறது. இதில் முதல் கட்ட மாக 10 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஆசிய  வங்கி மற்றும் தமிழக அரசு சார்பிலும் ஒப்  பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல்  கள் வெளியாகி உள்ளன.