விதொச கண்டனம்
சென்னை, டிச. 4- தமிழகத்தில் தொடர்ந்து அதிக ரித்து வரும் பெண்கள் மீதான வன்முறை, போதை பழக்க வழக்கங் களைத் தடுத்து நிறுத்திட வேண்டு மென வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் 10 நாட்க ளாக நடைபெற்ற நடைபயணத்தில் இறுதி நாளில், சென்னை மாநகர காவல்துறை மாதர்கள் மீது கொடூர மான தாக்குதலைத் தொடுத்துள்ள செயலுக்கு வன்மையான கண்ட னத்தை அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநில தலைவர் ஏ.லாசர் , மாநிலப் பொதுச்செயலாளர் வீ.அமிர்தலிங் கம் விடுத்துள்ள அறிக்கையில்,“ சென்னை கோட்டையை நோக்கி நடைப்பயணத்திற்குத் தயாராகிச் சென்ற மாதர்களை, தாம்பரத்தில் மாநகர காவல்துறை அராஜகமாக வும், ஜனநாயக விரோதமாகவும் கைது செய்துள்ளது. இதில் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச்செயலாளர் பி.சுகந்தி, மற்றும் கே.பாலபாரதி உள்ளிட்ட தலைவர்களையும், பெண்களையும் வழிமறித்துத் தாக்குதலை மாநகர காவல் துறை நடத்தியுள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட மாதர்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறையின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது உரிய நட வடிக்கையைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்” என்று வலி யுறுத்தியுள்ளனர்.