tamilnadu

img

மேகதாது அணை கட்டாமல் பிரதமர் தடுக்க வேண்டும்: கே.எஸ்.அழகிரி

சென்னை,அக்.8- தமிழகத்தின் நலன்கருதி மேக தாது அணை கட்டாமல் பிரதமர் மோடி  தடுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மேகதாதுவில் அணை கட்டும்  திட்டத்திற்கு தமிழக அரசின் அனு மதி தேவையில்லை என்றும், இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் காவிரி  ஆற்றின் குறுக்கே மேகதாதுவிற்கு அருகில் 67.16 டி.எம்.சி. கொள்ள ளவு கொண்ட தண்ணீரை தேக்கி வைக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் ரூ. 5,912 கோடி செல வில் அணை கட்டுவதற்கான தீவிர  முயற்சியில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இது  2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதி ரானதாகும். மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலமாக தமிழகத்தின் உரிமையைப் பறிக்கின்ற முயற்சி யாகவே கர்நாடக அரசின் நடவ டிக்கை அமைந்திருக்கிறது. தற் போது, மேகதாதுவில் அணை கட்டப்  படுமேயானால் காவிரிப் படுகை வறண்ட பாலைவனமாக மாறுவ தற்கு வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன். இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு எடுக்கும்  நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த  வேண்டிய பொறுப்பு அதிமுக அர சுக்கு இருக்கிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.

ஏற்கனவே, தமிழ்நாட்டின் உரி மைகளை பா.ஜ.க. அரசு பறிப்பதை  தமிழக அரசு தடுத்து நிறுத்த முடியாத அவலநிலையில் இருக்கிறது. இத்தகைய நிலை தொடர்ந்து நீடிக்காமல் மேகதாதுவில் அணை கட்டுவதை தடுக்க, சமீபகாலமாக மிகமிக நெருக்கமான உறவு கொண்டிருக்கிற பிரதமர் நரேந்திர மோடியின் மூலம் தடுக்க வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தை அணுகுவதன் மூலமாகவும் உரிய தீர்வு காண  வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

;