tamilnadu

img

உணவு-வேலை கேட்டு மாதர்கள் போராட்டம்

மதுரை, ஜூன் 1- உணவு வேண்டும், வேலை வேண்டும், வன்முறையற்ற வாழ்க்கை யை பெண்கள் வாழவேண்டுமென மத்திய - மாநில அரசுகளை வலி யுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மதுரை, விருது நகர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில்  கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதுரை மாநகரில் திங்களன்று 50 இடங்களில்  ஆர்ப்பாட்டம் நடை பெற்றது, மாவட்டத் தலைவர் கே. ராஜேஸ்வரி, மாவட்டச் செயலாளர் ஆர்.சசிகலா, பொருளாளர் ஆர்.லதா, துணைத் தலைவர்கள் மா.செல்லம், ஜே.ஜெயராணி, துணைச் செயலா ளர்கள் மல்லிகா, பகவதி மற்றும் பகுதி குழுத் தலைவர்கள் மற்றும் செயலா ளர்கள் ஆர்.ஜெயா, ஆர்.ப்ரீதி,  இந்தி ராணி, ஆர்.சுந்தரி , எம்.பாத்திமா, ஜி.யமுனா, ஏ.சரஸ்வதி, பானுமதி, தமி ழரசி மற்றும் மாவட்டக்குழு உறுப்பி னர்கள், கிளை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாள பட்டியில் ஐந்து இடங்களில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் வனஜா, தேவி, மாரி யம்மாள் ஜானகி, தனலட்சுமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நத்தம் வெள்ளக்குட்டுவில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயலாளர் ராணி, பன்னியாமலை எம்ஜிஆர் நகரில் நத்தம்  ஒன்றிய செயலாளர் சுமதி தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருவில்லிபுத்தூர்

திருவில்லிபுத்தூர் கீழப்பட்டி பிள்ளையார் கோவில் தெரு நம்பி நாயுடு தெரு இடையபொட்டல் தெரு ரைட்டன்பட்டி மாதா நகர் மாலைப் பட்டி பெரும்பள்சேரி கிளைகள் சார்பில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத் தில் சிஐடியு மாநிலத் துணைத் தலை வர் மகாலட்சுமி, மாவட்டத் துணைச் செயலாளர் பிச்சைக்கனி, மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ரேணுகா தேவி, செல்வி முருகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர். இராஜ பாளையம் எம்ஜிஆர் நகரில் மாதர் சங்க நகர செயலாளர் மேரி தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேனி

தேனி மாவட்டத்தில் போடி, பெரிய குளம், வடுகபட்டி தாமரைக்குளம், ஜெயமங்கலம், ஆண்டிபட்டி, சின்ன மனுர், பண்ணைப்புரம், கூடலூர் உள்ளிட்ட 15 இடங்களில் நடை பெற்ற போராட்டத்தில்  மாவட்டச் செயலாளர் எஸ். வெண்மணி, மாவட்டத் தலைவர் எஸ்.ஈஸ்வரி, பி.சித்ரா, எஸ் . மீனா, கே.கோமதி, எம்.சாந்தி, எஸ்.செல்வி, ஆர்.அமுதா, கதீஜா பீவி, பாண்டியம்மாள் மற்றும் மாதர் சங்க தலூகா நிர்வாகிகள் பங் கேற்றனர்.   

சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் சிவ கங்கை, திருப்பத்தூர், எஸ்.புதூர், இளையான்குடி, காளையார் கோவில், கல்லல்,தேவகோட்டை ஆகிய ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.