tamilnadu

img

மாதர் சங்க நடைபயணம் எழுச்சித் துவக்கம்

வன்முறையற்ற, போதையற்ற தமிழகம் - புதுவை

கடலூர், நவ.25-  “போதையற்ற தமிழகம், வன்முறை யற்ற தமிழகம்; போதையற்ற புதுச்சேரி,  வன்முறையற்ற புதுச்சேரி” என்ற முழக்கத்தோடு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் சார்பில்  புதுமைப் பெண்களின் எழுச்சி நடை பயணம் வடலூர், திருவண்ணாமலை ஆகிய இரண்டு இடங்களில் இருந்து திங்களன்று (நவ.25) பெரும் உற்சா கத்துடன் தொடங்கியது.வழியெங்கும் தோழமை இயக்கங்கள் சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. கடலூர் மாவட்டம் வடலூரில் இருந்து தொடங்கிய பயணக் குழு விற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி தலைமையேற்றுள்ளார். வடலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.மேரி தலைமை தாங்கினார். மாவட்டத் தலைவர் பி.முத்துலட்சுமி, துணைத் தலைவர் ஆர்.சிவகாமி, பொருளாளர் ஏ.தைனீஸ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.தேன்மொழி வரவேற்றார்.

நடைபயணத்தை துவக்கி வைத்து அகில இந்திய துணைத்தலைவர்கள் சுதா சுந்தரராமன், உ.வாசுகி, மத்தியக் குழு உறுப்பினர் என்.அமிர்தம், மாநிலச் செயலாளர் வி.பிரமிளா, மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ராணி, இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்க தென்மண்டல துணைத்தலைவர் எம்.கிரிஜா உள்ளிட் டோர் உரையாற்றினார்கள். ஒன்றியச் செயலாளர் பி.அஞ்சு நன்றி கூறினார்.

துவக்கநிகழ்ச்சியில் நந்தினி சகோதரி 

நவம்பர் மாதம் மழைக்காலமாகும், மழையால் நடைபயணத்திற்கு இடை யூறு வரக்கூடாது என்பதற்காக மார்க்சிஸ்ட் கட்சியின் பரங்கிப்பேட்டை ஒன்றியக்குழு சார்பில் 100 குடைகளும், போக்குவரத்து சம்மேளன சிஐடியு துணைத்தலைவர் ஜி.பாஸ்கரனுக்கு பேரக்குழந்தை பிறந்ததையொட்டி 100 குடைகளும் நடை பயணத்தோழர் களுக்கு வழங்கப்பட்டன.  நடை பயணத்தை, சாதி மற்றும் மத வெறியர்களால் அரியலூரில் கும்பல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு படு கொலை செய்யப்பட்ட நந்தினியின் சகோதரி சிவரஞ்சனி கொடி அசைத்து விண்ணதிரும் முழக்கங்களுக்கிடையே பயணத்தை துவக்கி வைத்தார்.

பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு 

துவக்க நிகழ்ச்சியில் பேசிய மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ. வாசுகி, நாட்டில் தலித் சமூகம் என்றால் கூடுதல் வன்முறையும் பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் என்றால் அவர்கள் மீது கூடுதல் வன்முறையும் நிகழ்த்தப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். 

தமிழகத்தில் குழந்தைகள் மீதான வன்முறை பலமடங்கு அதிகரித்துள் ளது. 2016 விட 2017 ல்  24 விழுக்காடு வன்முறை அதிகரித்துள்ளது. எல்லா வன்முறை வழக்குகளிலும் தீர்ப்பு உடனடியாக வழங்கப்படுவதில்லை. காவல்நிலையத்தில் கட்டப்பஞ் சாயத்து செய்து வழக்குகள் பதிய விடாமல் தடுக்கப்படுகிறது. குற்றவாளி களுக்கு ஆதரவாகம், குற்றவாளிகள் தப்புவதற்குள் காவல் நிலையம் பயன்படுகின்றன; பாதிக்கப்பட்டவர்கள் உறுதியாக இருந்தால் மட்டுமே வழக்கு பதியப்படுகிறது. பாதிக்கப் பட்டு, நொந்து, கண்ணீர் சிந்தி வாழ் பவர்களை போராளிகளாக ஜனநாயக மாதர் சங்கம் மாற்றி குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துகிறது என்று அவர் கூறினார். கடந்த 46 ஆண்டுகளில்  மாநில அள வில் எண்ணற்ற போராட்டங்கள் நடை பெற்றாலும் மாநில அளவில் நடை பெறும் முதல் நடைபயணம் இதுதான்.  கிராமங்களில் நுண்கடன் திட்டத்திற்கு ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய, மாநில அரசுகளின் கொள்கை கள் வன்முறையைத் தூண்டுவதாக, வன்முறை யை அதிகரிப்பதாக உள்ளது. கருணை இல்லாத அரசு கடுகி ஒழிக என்ற வள்ளலாரின் மொழிக்கேற்ப துவங்குகிறது. இந்த அரசை எதிர்த்து அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நடைபயணம் என்றும் வாசுகி கூறினார்.

பெண்குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை

அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தர ராமன் பேசும்போது, தமிழகத்தில் எழுந்த புதுமைப் பெண்களின் குரல் நாடு முழுவதும் ஒலிக்கும். பெண்களுக்கும்  இன்று பாதுகாப்பு கிடையாது. பெண் குழந்தைகளுக்கு முற்றிலும் பாதுகாப்பு இல்லை. கடந்த ஆண்டைவிட 6 சதவீதம் அள விற்கு தலித் பெண்கள் மீது குற்றங்கள் அதி கரித்துள்ளன. இன்றுவரை கவுரவக் கொலையை தடுப்பதற்கான முறையான சட்டத்தை மத்திய- மாநில அரசுகள் இயற்றவில்லை என்று சாடி னார்.

10 நாட்கள், 400 கீ.மீ, பயணம்

மாதர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பி.சுகந்தி பேசும்போது, வன்முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி 10 நாட்கள் 400 கி.மீ நடைபய ணம் மேற்கொண்டு மக்களோடு உரையாட இருக்கி றோம். வன்முறையை வேரறுக்க இந்தப் பயணம் உறுதுணையாக இருக்கும். பெண்கள் மீது மிக அதிக வன்முறை நடக்கும் கடலூர் மாவட்டத்தில் மாதர் சங்கம் பல போராட்டங்களை நடத்தி நீதி மன்றத்தில் போராடி வெற்றி பெற்றுள்ளது என்றார்.  திட்டக்குடியில் இரண்டு பெண் குழந்தைகள் மீது பாலியல் வல்லுறவு நடைபெற்ற சம்பவத்தில் மாதர் சங்கம் தலையிட்டு குற்றவாளிகளை நீதி யின் முன் நிறுத்தி 23 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தது. எண்ணற்ற வழக்குகள் இன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ளன. எத்தனை தடை கள் வந்தாலும் இந்த நடைபயணம் கோட்டை நோக்கிச் செல்லும் என்றார் அவர்.

மகத்தான போராளிகள் 

இக்காலத்தில் குடும்ப வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டவர்கள், பாலியல் வன்முறைக்கு உள் ளாக்கப்பட்டவர்கள், காதலிக்க மறுத்ததால் படு கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தார், நீதிக்காக போராடிக் கொண்டிருக்கின்ற பெண் களும் அவர்களின் குடும்பத்தாரும், மாதர் இயக்கத் தின் மகத்துவம் மிக்க போராளிகளும் இந்த  நடை பயணத்தில் கலந்து கொண்டுள்ளனர்.

உற்சாக வரவேற்பு 

நடைபயணத்திற்கு பல்வேறு இடங்களில் விவ சாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. விவசாயிகள் சங்கத்  தலைவர் ஜி.ஆர்.ரவிச் சந்திரன், செயலாளர் ஜி.மாதவன், நிர்வாகிகள் எம்.பி.தண்டபாணி, எஸ்.எஸ்.ராஜ், நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நெய்வேலி ஆர்ச் கேட்டில் சிஐடியு என்எல்சி ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் வரவேற்பு அளிக்கப் பட்டது. தலைவர் வேல்முருகன், செயலாளர் ஜெய ராமன், பொருளாளர் சீனுவாசன், அலுவலக செய லாளர் குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு நடை பயணக் குழு தலைவர்களை கதராடை அணி வித்து வரவேற்றனர். தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாவட்ட தலைவர் வீராசாமி, செயலாளர் பி.வாஞ்சிநாதன், மாணவர் சங்கச் செயலாளர் குமரவேல் உள் ளிட்டோர் கதராடை அணிவித்து வரவேற்பளித்தனர். 

திருவண்ணாமலை 

திருவண்ணாமலையிலிருந்து துவங்கிய மற்றொரு நடைபயணக்குழுவுக்கு மாதர் சங்க மாநி லத் தலைவர் எஸ்.வாலண்டினா தலைமையேற் றுள்ளார். அண்ணா சிலை அருகே நடைபெற்ற துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளர் எஸ்.லூர்துமேரி தலைமை தாங்கினார், மாவட்டத் தலைவர் எஸ்.செல்வி வரவேற்றார், மாநில துணைத்தலைவர் கே. பாலபாரதி, மாநில நிர்வாகிகள் எஸ். கே. பொன்னுத் தாய், எஸ்.டி. சங்கரி, எஸ்.ராணி, ஏ.ராதிகா, ஜி. கலைச்செல்வி, எஸ்.லட்சுமி, உஷாராணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கோவை மாவட்டம் துடியலூரில் பாலியல் வன்முறையால் குழந்தையை இழந்த வனிதா, ஈரோடு மாவட்டம் அந்தியூரில் நடைபெற்ற வன் முறையில் உயிரிழந்த சுகந்தி, ஓவியா ஆகிய குழந்தைகளின் தாயார்களான லட்சுமி, வீரம்மாள் ஆகியோர் கொடியசைத்து நடைபயணத்தை துவக்கி வைத்தனர்.

சாதிவெறியர்கள்

துவக்கநிகழ்ச்சியில் பேசிய எஸ். வாலண்டினா, தமிழகம் அமைதியாகவும் வளமாகவும் இருப்ப தாக முதல்வர் பேசி வருகிறார். ஆனால், தினந் தோறும் பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. சாதி, மதங்களைத் தாண்டி காதல் மணம் புரியும் இளைஞர்களும், இளம்பெண் களும் சாதி வெறியர்களால் கொல்லப்படுகின்ற னர். அரியலூர் மற்றும் வடலூர் பகுதிகளில் இத்த கைய பாதக செயல்கள் நடைபெற்றபோது,  காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.  திருவண்ணாமலையில் கடந்த காலங்களில் பெண் சிசுக்கொலைகள் அதிகமாக நடைபெற் றுள்ளது. பெண் குழந்தைகளை பாதுகாக்க மாதர் சங்கம், தொடர் போராட்டம் நடத்தியுள்ளது. பெண் கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது நடத்தப்படும் வன்முறையை தடுக்கவே, இந்த நடைபயணம் என்றார்.

கே.பாலபாரதி

மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பால பாரதி பேசியபோது, சமூகத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீது ஏராளமான வன்முறை தாக்குதல்கள் நடந்து வருகிறது. ஐஐடி மாணவி பாத்திமா உள்ளிட்ட இளம்பெண்கள் அந்த வன் முறை தாக்குதல்களில் பலியாகியுள்ளனர். பெண் களுக்கு பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில், இந்தியா 3 ஆவது இடத்தில் உள்ளது வேதனை யளிக்கிறது என்று தெரிவித்தார்.  

இயக்குநர் லெனின்பாரதி

திரைப்பட இயக்குநர் லெனின்பாரதி பேசிய போது, நாடகம், சினிமா, ஊடகங்களில் பெண் களை சமத்துவமாக காட்சிப்படுத்தவில்லை. சினிமா விலும், தொலைக்காட்சி தொடர்களிலும் பெண் களை போகப்பெருளாகவே சித்தரிக்கின்றனர். பெண் குழந்தைகளையும், ஆண் குழந்தைகளை யும் சமமாக நடத்தி, நமது குடும்பத்திலிருந்து சமத்துவத்தை வளர்க்க வேண்டும் என்றார்.

வழியெங்கும் வரவேற்பு 

நடைபயண குழுவினருக்கு வேங்கிக்கால், சீலப்பந்தல், மல்லவாடி, கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு நாயுடு மங்கலத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. செவ்வாயன்று (நவ.26) கலசப்பாக்கம், குருவிமலை, வசூர், போளூர், வட மாதி மங்கலம் வரை நடைபயணம் நடைபெறு கிறது.

செய்தி, படங்கள்: வ.சிவபாலன், ஜே.எஸ்.கண்ணன்










 

;