tamilnadu

img

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு: மு.க. ஸ்டாலின் சாடல்

சென்னை, ஏப்.23- மருத்துவர்களையே காக்க முடியாத இந்த அரசு மக்களை மட்டும் எப்படி காக்கும் என்று திமுக தலை வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியுள்ளதாவது:

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை யில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி விடுதி யில் உள்ள மருத்துவ மாண வர்கள் ஆகியோருக்குப் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் சரியான முறையில் வழங்கப்பட வில்லை என்றும் கூறி  போராட்டம் நடத்திய செய்தி  கொரோனாவை விடக் கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்குக் கூட  போதிய வசதி செய்துதர முடி யாத இந்த அரசாங்கமா  மக்க ளைக் காக்கும்? சில ஆயிரம் மருத்துவர்க ளையே முறை யாகக் கவனிக்க முடியாத இவர்கள், பல லட்சம் மக் களை எப்படிக் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்குகிறது. கொஞ்சமும் பொறுப்பு இல்லாத மனிதர்கள் கையில்  ஆட்சி சிக்கி இருக்கிறது! சென்னை போன்ற பெரு நகரில் உள்ள பொது மருத்துவமனையிலேயே இந்த நிலைமை என்றால், மற்ற மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவை யில்லை! தமிழக சுகாதாரத் துறையின் சுவாசக்குழாய் அடைப்பை யார் அகற்றிச் சரி செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

;