tamilnadu

img

அனைத்து தொழிலாளர்களுக்கும் ஏப்ரல் மாத ஊதியம் முழுமையாக கிடைக்க சிஐடியு வலியுறுத்தல்!

சென்னை, ஏப்.29- சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன், மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் ஊரடங்கு காலத்தில் அனைத்து பிரிவு உழைப் பாளி மக்களும் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உணவு பற்றாக் குறை, வீட்டுவாடகை, மருத்துவ செலவு போன்றவைகளை தாக்குப் பிடிக்க முடியாமல், திணறிக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய அரசு ஆலை தொழிலாளர்கள், காண்ட்ராக்ட் தொழி லாளர்கள் மற்றும் பயிற்சி உள்ளிட்ட தொழிலாளர்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்வதோ, வேலையில் இருந்து  நீக்குவதோ கூடாது என அறிவிப்பு வெளி யிட்டு இருந்தது. ஆனால் இதற்கெதி ரான கருத்துக்களை சில முதலாளித்துவ ஆதரவு அமைப்பினர் வெளியிட்டு வந்தனர்.

இந்நிலையில், தொழில் உறவு சட் டங்கள் குறித்த நாடாளுமன்ற நிலைக் குழு ஏப்ரல் 15 அன்று, தனது பணியை துவக்கியதாகவும், 21 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழுவினருக்கு, மெயில் மூலம், மேற் படி தொழில் உறவு சட்டங்கள் குறித்த ஆவணத்தை சுற்றுக்கு அனுப்பி, 8 நாள்களில் விளக்கம் கேட்கப்பட்டதாக வும், இந்த சட்ட வரம்புக்குள் இல்லாத, தற்போதைய ஊரடங்கு காலத்திற்கு ஊதியம் வழங்குவது குறித்தும், மேற்படி குழு கருத்து தெரிவித்துள்ளது.  அதில் இக்காலத்திற்கு ஊதியம் அளிக்க முதலாளிகளை நிர்ப்பந்திக்க கூடாது என்ற கருத்து மேலோங்கி வந்துள்ளது. மேற்படி கருத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் திமுக சார்ந்த உறுப்பினர்கள் மட்டும் ஆகியோர் கடுமையான ஆட்சே பணையை தெரிவித்துள்ளதாக தகவல் கள் வந்துள்ளன.

நாடாளுமன்ற நிலைக்குழுவின் மேற்படி கருத்து, பிரதமர் தொலைக் காட்சியில் நிகழ்த்திய உரைக்கு எதிரா னது. நிலைக்குழு கருத்து, முதலாளி களின் வேண்டுகோள் என்ற பெயரில், தனது முந்தைய நிலைபாட்டை மாற்றிக் கொள்வதற்கு மத்திய பாஜக ஆட்சி இதைப்பயன்படுத்தக் கூடும் என சிஐடியு கருதுகிறது. அவ்வாறு செய்வது  மொத்த பொருளாதாரத்தையும் மிகக் கடுமையாக பாதிக்கும், தொழிலாளர் களை, கொடுரமாக தாக்கி அழிப்பதற்கு ஒப்பாகும். மத்திய ஆட்சி தொழிலாளர் முதுகில் குத்தும் வேலையை, இந்த ஊர டங்கு காலத்தில் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது என்பதற்கு மேலும் ஒரு உதாரணமாக இந்த நிலைக்குழு வின் கருத்துக்கள் உள்ளது. இந்த கருத்தை மத்திய பாஜக ஆட்சி நிராக ரித்து, பிரதமர் குறிப்பிட்டவாறு, அனை த்து தொழிலாளர்களுக்கும், ஏப்ரல் மாத ஊதியம் முழுமையாக கிடைக்க ஆவன செய்ய வேண்டுமென சிஐடியு தமிழ் நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது.

 

;