சென்னை, அக். 28- கவின்கேர் எபிலிட்டி விருதுகள் 2020ஐ பெற சாதனை படைத்த மாற்றுத்திற னாளிகள் அடுத்த மாதம் 12ஆம்தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கவின்கேர் மற்றும் எபிலிட்டி பவுண்டே ஷன் ஆகியவை இணைந்து ஆண்டு தோறும் சாதனை படைக்கும் மாற்றுத்திற னாளிகளுக்கு விருதுகள் வழங்கி கவுர வித்து வருகின்றன. 18வது ஆண்டாக கவின்கேர் எபிலிட்டி விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை பெற நாடு முழுவதும் உள்ள திறமையுள்ள மாற்றுத்திறனாளிகள் தங்கள் பரிந்துரை களை சமர்ப்பிக்கலாம். மாற்றுத்திற னாளிகளின் திறமைகளை அங்கீகரிக்கும் விதமாகவும் அவர்களை கவுரவிக்கும் விதமாகவும் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திற னாளிகள் தங்களின் தடைகளை உடைத்து சாதனை படைத்ததற்காகவும், மிகுந்த சிரமங்களுக்கு இடையே வாழ்க்கை யில் உயர்ந்த நிலையை அடைந்ததற்காக வும் தனிப்பட்ட நபர்களை கவுரவிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு www.cavin kare.com or www.abilityfoundation.org இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது +91 9962386773 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.