2019-20 நிதியாண்டில், 23 வங்கிகளின் வாராக்கடன் விகிதம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.
2019-20 நிதியாண்டுக்கான வாராக்கடன் விவரங்களை, 23 வங்கிகள் வெளியிட்டுள்ளன. அதன்படி, வங்கிகளின் வாராக்கடன் விகிதம், 2018-19ஆம் நிதியாண்டை விட 3 சதவீதம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் வாராக்கடன் தொகை ரூ.5.4 லட்சம் கோடியாக இருந்தது. இதுவே, 2019-20ஆம் ஆண்டில் ரூ.5.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. எஸ்.பி.ஐ, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட பெரிய வங்கிகளில் தான் வாராக்கடன்கள் அதிகமாக உள்ளன. மேலும், 2019-20ஆம் நிதியாண்டில், தனியார் வங்கிகளின் வாராக்கடன்கள் 14.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.9 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.