tamilnadu

img

மே 30ல் பதவியேற்கிறார் மோடி

புதுதில்லி, மே 26-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மோடி, மீண்டும் இரண்டாவது முறையாக மே30 அன்று பிரதமராக பதவியேற்கிறார்.17ஆவது மக்களவைக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஒட்டுமொத்தமாக தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றுள்ளது. 16ஆவது மக்களவைக் கலைக்கப்பட்டதாக சனியன்று (மே 25) குடியரசுத் தலைவர்மாளிகையான ராஷ்டிரபதி பவனி லிருந்து அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் தில்லியில் நடந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழு தலைவராக மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மோடி நாடாளுமன்றக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து வழங்கினார். இந்தச் சந்திப்பின்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழகமுதல்வர் எடப்பாடி பழனிசாமி, சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பஸ்வான்,பாஜக தலைவர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர், மோடியை ஆட்சியமைக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அமைச்சரவைக் குழுவில் இடம்பெறவுள்ள புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள எம்.பி.க்களின் பெயர்களை யும், ஒதுக்கப்படும் துறைகளையும் அளிக்குமாறு மோடியிடம் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், குடியரசு தலைவர்மாளிகையில் வரும் 30-ந்தேதி இரவு7 மணிக்கு பிரதமராக மோடி பதவி யேற்கிறார் என குடியரசு தலைவர் மாளிகை ஞாயிறன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இதன்படி 2-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற் கிறார்.  தொடர்ந்து புதிய அமைச்சர வை பதவியேற்பு விழாவும் நடைபெறுகிறது.  இந்த விழாவில் பங்கேற்கும்படி வெளிநாட்டு தலைவர்களுக்கும் அழைப்பு விடப்படும் என கூறப்படு கிறது.  மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.முன்னதாக பாஜக கூட்டணி கூட்டத்தில் பேசிய மோடி, “நமக்காக வாக்களித்தவர்களுக்காகவும், வாக்களிக்காதவர்களுக்காகவும் நாம் பணி யாற்ற வேண்டும். நமது செயல்கள் அவர்களுக்கு நம்பிக்கையையும் திருப்தியையும் தர வேண்டும். பாஜக கூட்டணி பிராந்திய திட்டங்கள் மற்றும்தேசிய கனவுகள் என இரண்டு பாதை களில் பயணிக்கிறது சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க வேண்டியதும் நமது கடமை” என்று கூறினார்.