tamilnadu

img

துணிச்சலாகச் செயல்படும் யோனெக்ஸ் நிறுவனம்

ஹாங்காங்கில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிண்டன் தொடரை யோனெக்ஸ்  என்ற ஜப்பான் நிறுவனம் தலைமையேற்று சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனத்துடன் இணைந்து நடத்தி வருகிறது.தற்போது ஹாங்காங்கின் முக்கிய நகரங்களில் சீனாவிற்கு எதிராகப் போராட்டம் நடந்து வருகிறது. இதனால் பேட்மிண்டன் தொடருக்கு போதுமான பாதுகாப்பு அளிப்பது சிரமம் என ஹாங்காங் காவல்துறை கையை விரித்த பொழுதிலும், யோனெக்ஸ் நிறுவனத்தின் துணிச்சலான முடிவால் தான் சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் தற்போது போட்டியைக் கவனித்து வருகிறது. 

யோனெக்ஸின் பணி?

ஜப்பான் நாட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த யோனெக்ஸ் நிறுவனம் பேட்மிண்டன், டென்னிஸ், கோல்ப் (ஆசியா, அமெரிக்கா) போன்ற விளையாட்டுகளுக்கான ராக்கெட் (மட்டை) முதல் காலணி வரை அனைத்தையும் தயாரித்து வருகிறது. யோனெக்ஸ் நிறுவன பொருட்கள் தரத்திலும், வேகத்திலும்  சிறந்ததாக இருப்பதால் முன்னணி வீரர்கள் அனைவரும் ஸ்பென்சருடன் விளையாடி வரு கின்றனர். பேட்மிண்டன் தொடரில் யோனெக்ஸ் நிறுவனம் தான் முதலிடத்தில் உள்ளது.