tamilnadu

img

தொடர்பு வழி கோவிட் பரவல்: எச்சரிக்கை தேவை

கூட்டம் கூட தடை தொடரும்:  கேரள முதல்வர் பேட்டி

திருவனந்தபுரம், மே 16- தொடர்பு மூலம் கோவிட் 19 நோய் பரவும் வாய்ப்பு அதிக ரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரி வித்தார். எனவே, முன்னெச்சரிக்கை தொடர வேண்டும். கூட்டம் கூடுவதற்கு விதிக்கப்பட்ட தடையில் எந்த சமர சத்துக்கும் இடமில்லை எனவும் அவர் கூறினார்.  வெள்ளின்று கோவிட் ஆய்வுக் கூட்டத்துக்கு பிறகு செய்தி யாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது: ஞாயிறு முழு ஊரடங்கு தொடரும். நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளாமல் சில நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. சில இடங்களில் திருவிழா, கூட்டாக வேண்டுதல் போன்ற வற்றை நடத்த திட்டமிடப்படுகிறது. ஆனால், கூட்டம் கூடுவ தற்கான தடையில் எந்த சமரசமும் இல்லை. கட்டுப்பாடுகள் தொடரும் என முதல்வர் கூறினார். 

16 பேருக்கு கோவிட்

வெள்ளியன்று கேரளத்தில் 16 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. வயநாடு 5, மலப்புறம் 4, ஆலப்புழா, கோழிக்கோடு தலா 2, கொல்லம், பாலக்காடு, காசர்கோடு தலா ஒன்று. இதில் 7 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்த வர்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்த 4 பேருக்கும் மும்பை யிலிருந்து வந்த 2 பேருக்கும் தொடர்பு வழியாக 3 பேருக்கும் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. நோய் பாதிப்புடன் மிக அதிகமாக மலப்புறம் மாவட்டத்தில் 19 பேர் சிகிச்சை பெற்று  வருகிறார்கள். 42,201 மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 40,631 மாதிரிகள் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டன. ஹாட் ஸ்பாட்டுகளின் எண்ணிக்கை 16. வெள்ளிக்கிழமை வரையிலான 576 நோயாளிகளில் 311 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். கூடுதலாக 8 வெளிநாட்டினரும் உள்ளனர்.  

காவல்துறை ரோந்து

பிற மாநிலங்களிலிருந்து வந்த 70 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டது. தொடர்பு வழியாக 187 பேருக் கும் தொற்று ஏற்பட்டது. கேரளத்தில் நோயாளிகள் அதிக ரிப்பது கவலை அளிக்கிறது. தொடர்பு வழியாக நோய் பரவும் வாய்ப்பு நம்முன் உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை யை அதிகரிக்க வேண்டும். பாதுகாப்பான தனிமனித இடை வெளியை பின்பற்ற வேண்டும். மற்ற பாதுகாப்பு நடவடிக்கை களையும் கடைப்பிடிக்க வேண்டும். தனிமையில் இருப்போர் வெளியே வரக்கூடாது. தனிமையை மீறியதாக 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரத்தில் 53, காசர்கோடு 11 வழக்குகள். உத்தரவுகளை மீறுவோரை கண்டறிய அனைத்து மாவட்டங்களிலும் இருசக்கர வாகன ரோந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். கண்காணிப்பில் உள்ளவர்களது வீடுகள் மற்றும் அதன் அருகிலும் உள்ள பகுதிகளில் காவல்துறையினரின் ரோந்து நடக்கும்.  

17 விமானங்களில் 3732 பேர் 

கேரளத்தில் உள்ள 4 விமான நிலையங்களில் 3732 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளனர். கேரளத்தில் இருந்து 33,000 வெளி மாநில தொழிலாளர்களுடன் 29 ரயில்கள் சென்றுள்ளன. 8 மாநிலங்களில் இருந்து கேரளத்துக்கு ரயில்கள் இயக்க ரயில்வே இணங்கியுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களை திருப்பி அனுப்ப வசதியாக 5 மாநிலங்கள் ரயில்கள் இயக்க அனுமதி அளித்துள்ளன. இங்கு சிக்கி இருப்பவர்கள் அந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். பெங்களூர்-திருவனந்தபுரம் இடை நில்லா விரைவு ரயில்  ஒவ்வொரு நாளும் குளிர்சாதன வசதி இல்லாமல் இயங்கும்.  மே 18 முதல் ஜூன் 14 வரை கேரளத்தில் இருந்து 28 ரயில்களில் மேற்கு வங்க தொழிலாளர்கள் அனுப்பப்படுவார்கள். கப்பல்களில் பயணிகள் கூட்டமாக வந்தனர். அவர்களில் 3 பேருக்கு தமிழ்நாட்டில் நோய் கண்டறி யப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் சக பயணிகளுக்கு தனி யாக பரிசோதனை நடத்தப்படும் என முதல்வர் கூறினார். 




 

;