tamilnadu

img

கொரோனா வைரசை கோமியம் கட்டுப்படுத்துமா? கிளப்பிவிடும் சங்-பரிவார பேர்வழிகள்

மும்பை:
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பசுவின் கோமியத்தை (சிறுநீரை) மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலை தளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.சீனாவில் கொரோனா வைரஸ்தாக்குதலுக்கு பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இந்நிலையில், கோரோனாவைரசால் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு வெள்ளைப்பூண்டு, கிராம்பு,
கறிவேப்பிலை மற்றும் பசுவின் கோமியத்தை மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலை தளங்களில் சிலர் தகவல் பரப்பி வருகின்றனர். குறிப்பாக, சங்-பரிவாரங் களைச் சேர்ந்தவர்கள், கோமியத்தின் மகிமை என்று வழக்கம்போல கதையடிக்கத் துவங்கியுள்ளனர்.

இந்து மகா சபையின் தலைவர் சாமியார் சக்கரபாணிதான் இதனை துவக்கி வைத்தவர். ஆனால், பொதுமக்கள் இதனை நம்ப வேண்டாம் என மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஸ் தோபே தெரிவித்து உள்ளார். கொரோனா வைரசை குணப்படுத்த குறிப்பிட்ட மருந்துஎதுவும் இல்லை.  வெள்ளைப் பூண்டு, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் பசுவின் கோமியம் ஆகியவை கோரோனா வைரசை குணப்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை. எனவே மக்கள் வதந்தியை நம்பக்கூடாது என்று கூறியுள்ளார். 

;