tamilnadu

img

பெரும்பான்மையினரின் ஆட்சியை அல்ல; சட்டத்தின் ஆட்சியையே நாம் கொண்டிருக்கிறோம்... மும்பை உயர்நீதிமன்றம் அதிரடி

மும்பை:
நாட்டிலுள்ள சட்டங் களை எதிர்த்து, அமைதி வழியில் போராடும் குடிமக்களைத் தேசத் துரோகிகள் என்று அழைக்க முடியாது என மும்பை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்திலுள்ள மாஜல்காவுன் எனும் பகுதியில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினர் அனுமதிதர மறுத்து விட்டனர். மாவட்டநீதிமன்றமும் அனுமதி வழங்கவில்லை. இதை
யடுத்து, போராட்டக் குழுவைச் சேர்ந்த இப்திகார் ஷேக்உள்ளிட்டவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். 

இந்த மேல்முறையீட்டு மனு, நீதிபதிகள் டி.வி. நளவாடே மற்றும் எம்.ஜி. செவ்லிகார் ஆகியோர் அடங்கியஅமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அப்போது, காவல்துறைமற்றும் மாவட்ட நீதிமன்றத் தின் ஆணைகளை ரத்து செய்து,போராட்டத்திற்கு அனுமதி அளித்த நீதிபதிகள், “நாட்டின் சட்டத்தை எதிர்த்து, அமைதி வழியில் போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு” என்று தீர்ப்பளித்துள்ளனர்.மேலும், “நாட்டின் சட் டத்தை எதிர்ப்பதாலேயே, அந்த நாட்டின் மக்கள்தேசத் துரோகிகள் ஆகிவிடமாட்டார்கள்” என்று குறிப் பிட்டுள்ள நீதிபதிகள், “நாம் ஒரு ஜனநாயகக் குடியரசு என்பதை மனத்தில் இருத்த வேண்டும்; நம்முடைய அரசியலமைப்பு நமக்கு சட்டத் தின் ஆட்சியைத்தான் வழங்கியுள்ளதே தவிர; பெரும்பான்மையினரின் ஆட்சியை அல்ல” என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

;