tamilnadu

img

இந்தியாவின் ஜிடிபி அதிர்ச்சி அளிக்கிறது... மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும்!

மும்பை:
இந்தியாவின் பொருளாதார நிலை அதிர்ச்சி அளிப்பதாகவும், வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், கிராமப்புற மக்களின் வாங்கும் சக்தியை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தால் மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) தலைமைப் பொருளாதார வல்லுநரும், வம்சாவளி இந்தியருமான கீதா கோபிநாத்கூறியுள்ளார்.இந்தியாவின் ஜிடிபி நடப்பு நிதியாண்டில் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே இருக்கும் என்றும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார்.மத்தியில், பாஜக ஆட்சிக்கு வந்த2014 முதலே நாட்டின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. அதிலும் 2019-20 நிதியாண்டில், கடந்த6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குஇந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) பெரும் சரிவுஏற்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டின் ஏப்ரல் -ஜூன் இடையிலான முதல் காலாண் டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதமாகக் குறைந்தது. அதற்கடுத்த ஜூலை - செப்டம்பர் இடையிலான இரண்டாவது காலாண்டில், ஜிடிபி மேலும் குறைந்து 4.5 சதவிகிதத்திற்கு போய்விட்டது.இந்நிலையிலேயே, இந்திய பொருளாதாரம் குறித்தான பல்வேறு தரமதிப்பீட்டு நிறுவனங்களின் அறிக்கைகள் பயமுறுத்தும் விதமாக உள்ளதாகவும், ரிசர்வ் வங்கிமற்றும் பிற மதிப்பீட்டு நிறுவனங்களின் தரவுகளைப் பார்க்கையில், ஜனவரியில் எங்கள் (ஐஎம்எப்) தரவுகளையே மீண்டும் திருத்திக் கொண்டுவரவேண்டிய நிலை ஏற்படும் என்றுதெரிவதாகவும் ஐஎம்எப் அதிகாரி கீதா கோபிநாத் குறிப்பிட்டுள்ளார்.நிச்சயமாக அந்தத் திருத்தம் இந்தியாவுக்கு சாதகமாக இருக் காது; கணிசமான அளவில் கீழ் நோக்கிய திருத்தமாகவே இருக்கக் கூடும் என்று தெரிவித்துள்ள கீதாகோபிநாத், எனினும் அந்த எண்ணைதற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். “2025-இல் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டுவதற்கு, இந்தியாவின் ஜிடிபி 10.5 சதவிகிதமாக இருக்க வேண்டும். கடந்தஆறு ஆண்டுகளில் 8 முதல் 9 சதவிகித வளர்ச்சியைக் கண்டிருக்க வேண்டும்  இதற்கு முதலீட்டை ஈர்ப்பதும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் அவசியமாகும். அதுமட்டுமல்லாமல் கிராமப்புற பொருளாதாரம் வளர ஆதரவு அளிக்க வேண்டும். மேலும், அடிப்படை கட்டமைப்புக்குச் செலவிடுவதை அதிகப்படுத்த வேண்டும், ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்த வேண்டும். நேரடி வரியில் சீர்திருத்தம் மேற் கொள்ளப்பட வேண்டும்.

உள்நாட்டில் மக்களின் நுகர்வை அதிகரிப்பது, உற்பத்தித் துறையில் வளர்ச்சியை வேகப்படுத்துவது, வேலைவாய்ப்பு உருவாக்கத்துக்கு ஆதரவு அளிப்பது ஆகிய 3 கொள்கைகள்தான் இந்திய அரசுக்கு தற்போது மிகவும் முக்கியமாகும். அடுத்ததாக அதிகமான கடனை குறைப்பதன் மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம்தான் புதிய தனியார் முதலீடுகள் நாட்டுக்குள் வரும். உள்கட்டமைப்புக்கான முதலீட்டுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். பெருகிவரும் இளைஞர்களுக்கு அதிகமான, சிறந்தவேலைவாய்ப்புகளை உருவாக்கிடவேண்டும்” என்றும் கீதா கோபிநாத் பேட்டியில் கூறியுள்ளார்.

;