tamilnadu

img

இந்துத்துவா மதவெறிப் பேர்வழி அர்னாப் கோஸ்வாமி மீது 6 பிரிவுகளில் வழக்கு!

மும்பை:
மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக கூறி பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தற்போது மூன்றாம் கட்ட ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி மும்பைபந்த்ரா பகுதியில் ஒரு மசூதி முன்பு ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர் கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தினர். வாழ்வாதாரம் இன்றி தவிப்பதால் உடனேதங்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதுதொடர்பாக கடந்த 29-ஆம் தேதிதனியார் தொலைக்காட்சி ஒன்றில் பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமி மதவெறி விஷத்தைப் பாய்ச்சும் வகையில் பேசியதாக மும்பை போலீஸ் தரப்பில் தெரிவிக் கப்பட்டது.ராஸா எஜூகேஷன் வெல்பேர் சொசைட்டி அமைப்பின் செயலாளர் இர்பான் அபுதாகிர் ஷேக் என்பவரும் புகார் தெரிவித்தார்.இதையடுத்து அர்னாப் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153, 153-ஏ, 295-ஏ, 500, 511,120-பி ஆகிய பிரிவுகளின் கீழ் மும்பைதெற்கு பைதோனி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.முன்னதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது அவதூறு பரப்பும்வகையில் பேசியதாக அர்னாப் கோஸ்வாமி மீது பல்வேறு மாநிலங்களில் புகார் அளிக்கப்பட்டது. எனினும், உச்ச நீதிமன்றம் தடையால் அவர் வழக்கிலிருந்து தப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;