tamilnadu

img

மகாராஷ்டிரத்தில் கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தைத் தாண்டியது....

மும்பை 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனவால் அதிக சேத்ரத்தை சந்தித்துள்ளது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி   மகாராஷ்டிராவில் 2,916 பேர் கொரோனாவின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், உயிரிழப்பு 187 பேராக அதிகரித்துள்ளது. நாட்டின் நிதிநிலை நகரான மும்பையில் அதிகபட்சமாக 873 பேரும், புனேவில் 190 பேரும், தானேயில் 110 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 11 பேருக்கு கொரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தாராவி பகுதியில் மட்டும் 71 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

11 பேரில் நான்கு பேர் முகுந்த் நகரைச் சேர்ந்தவர்கள், இரண்டுபேர் சமூக நகர் மற்றும் இருவர் ராஜீவ் நகரைச் சேர்ந்தவர்கள்., சாய்ராஜ் நகர், போக்குவரத்து முகாம், தாராவியின் ராம்ஜி சாவ்ல் பகுதிகளைச் சேர்ந்த தலா ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளளதாக  பிரஹன்மும்பை மாநகராட்சி பிஎம்சி அதிகாரி தெரிவித்தார். இந்த நிலையில் வியாழனன்று  புதிதாக 165 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளதாகவும். இதன்மூலம் மாநிலத்தில் கொரோனாபாதித்தோரின் எண்ணிக்கை 2,916 லிருந்து 3,081 பேராக உயர்ந்துள்ளதாகவும். இன்று பாதிக்கப்பட்ட 165 பேரில் 107 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் லைவ் மின்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 

;