மும்பை,டிச.1- மகாராஷ்டிராவில் இரண்டு நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அம்புஜ்மத் என்ற இடத்தில் நக்ஸலைட்டுகள் பதுங்கியிருப்பதாக நக்சல் தடுப்புப் படை யினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி யிருந்த நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினர் மீது தாக்கு தல் நடத்தினர். போலீசார் நடத்திய எதிர்த் தாக்குதலில் இரு நக்ஸலைட்டுகள் கொல்லப்பட்டனர். மேலும் அவர்களின் முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இறந்தவர்கள், மக்கள் விடுதலைக்கான கொரில்லா ராணுவம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.