‘சிஐடியுதான் தொழிலாளர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தவர் தோழர் வி.பி.சிந்தன்’
வி.பி.சி நினைவு நாளில் அ.சவுந்தரராசன் பேச்சு
சென்னை, மே 8- சிஐடியுதான் தொழிலாளர்களை பாதுகாக்கும் என்ற நம்பிக்கையை தொழிலாளர்கள் மத்தியில் விதைத் தவர் தோழர் வி.பி.சிந்தன் என்று அவரது நினைவு நாள் கூட்டத்தில் சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்த ரராசன் கூறினார். தொழிற்சங்க மூத்த தலைவர் தோழர் வி.பி.சிந்தன் 38ஆவது நினைவு தினத்தை ஒட்டி சிஐடியு சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வியா ழனன்று (மே 8) நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் தலைமையில் ஓட்டேரி ஏ.பி. நினைவகத்தில் இருந்து பேரணியாகச் சென்று அவரது நினைவிடத்தில் மலர் வளை யம் வைத்து அஞ்சலி செலுத்தப் பட்டது. சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி பேசுகை யில், பாசிசத்தை வீழ்த்திய நாள் மே 9. பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட அனைத்து முதலாளித்துவ நாடுகளும் ஹிட்லரை ஆதரித்தன. ஐரோப்பா ஹிட்லரால் ஆக்கிரமிக் கப்படும் என்பதை கூட அந்த நாடு கள் உணர முடியவில்லை. கார ணம் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பு அவர்கள் கண்ணை மறைத்தது. சர்வாதிகாரி ஹிட்லருக்கு எதிராக ஒற்றுமையை கட்டுவோம் என ஸ்டாலின் கூறிய போது அந்த நாடு கள் மறுத்தன. அதனால்தான் ஜெர் மனியோடு எங்களை தாக்கக் கூடாது என ஸ்டாலின் ஒரு இடைக்கால ஒப்பந்தம் போட்டார். அந்த ஒப்பந்த த்தை மீறி ஹிட்லர் தாக்குதல் தொடுத்தான். அந்த யுத்தம்தான் 2ஆ வது உலக யுத்தத்தை தலைகீழாக மாற்றியது. தொட்ட இடமெல்லாம் வெற்றி, போன இடமெல்லாம் வெற்றி என்று இருந்த ஹிட்லரை தடுத்து, அடித்து திரும்பவும் அவனது நாட்டிற்கு விரட்டியடித்தது கம்யூனிஸ்டுகளின் செம்படை. அந்த வெற்றி நாள்தான் மே 9. சோசலிசத்தை அமல்படுத்து வதில், ஆட்களை திரட்டுவதில் மிகுந்த ஆர்வத்தோடு செயல்பட்டவர் தோழர் விபிசி. அவருக்கு வழங்கப் பட்ட பல்வேறு பணிகளை திறம்பட செய்தார். தொழிற்சங்க இயக்கத் திற்கு அவர் வந்த பிறகு சென்னையில் அடிப்படையில் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியினர் தொழிற்சங்கத்தில் ஆதிக் கம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். முதலாளிகளின் ஆதரவோடு அந்த சங்கங்கள் செயல்பட்டன. அதை எதிர்த்தும், முதலாளிகளுக்கு எதி ராகவும் தொழிலாளர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுத்தியதில் பெரும் பங்கு வகித்தவர் விபிசி. சிஐடியுதான் தொழிலாளர்களை காக்கும் என்ற நம்பிக்கையை மாநி லம் முழுவதும் உருவாக்கியவர். பிற அரசியல் கட்சியை சார்ந்த தலை வர்களை கூட ஈர்த்த மாபெரும் தலைவர் விபிசி. அதேநேரம் அவர் இருந்தால் ஆபத்து என்று முதலாளி களின் ஆதரவோடு அவரை மூலக் கடையில் வைத்து கொலை செய்ய வும் முயன்றார்கள். காவல் துறை, ரவுடிகள் தாக்குதல் என அவர் சந்தித்த அடக்குமுறைகள் ஏராளம். அது மட்டுமல்லாமல் காரணமே இல்லாமல் அவர் பலமுறை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஒவ்வொரு நடவடிக்கையிலும் அவர் புரட்சிகர உணர்வை எதி ரொலித்துக் கொண்டே இருப்பார். உலகம் முழுவதும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைத்தார். சோவியத் யூனியன் நடத்திய செஞ் சேனை புரட்சி குறித்து உணர்வு பூர்வமாக, உணர்ச்சியோடு பேசு வார். தற்போது நிரந்தர பணி என்பது ஒழிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தப்படு கிறார்கள். வி.பி.சிந்தன் காட்டிய வழி காட்டுதலின் அடிப்படையில், தொழி லாளர் நலன் என்ற வர்க்கப் புள்ளியில் நின்று அந்த ஒப்பந்த தொழிலாளர் களை திரட்டுவோம், தொழிற்சங்க இயங்கங்களை ஒன்றிணைப்போம். தற்போது நாட்டில் தலைதூக்கி வரும் பாசிசத்தை முறியடிக்க இந்நாளில் சபதமேற்போம். இவ்வாறு அ.சவுந்தரராசன் பேசி னார். அரசாங்க போக்குவரத்து ஊழி யர் சங்கத்தின் உதவி தலைவர் எம்.சந்திரன், சிஐடியு வடசென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்தி ரன், மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் சி.திருவேட்டை, சிபிஎம் மாநி லக்குழு உறுப்பினர் எல்.சுந்தர ராஜன், மத்திய சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.முரளி, மத்திய சென்னை ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பால சுப்பிரமணியம் ஆகியோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி னர். இதில் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொருளாளர் சசிகுமார், சாலை போக்குவரத்து சம்மேளன பொதுச் செயலாளர் வி.குப்புசாமி, அர சாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் தலைவர் துரை, பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.