tamilnadu

img

கொடுமையே அறமானால் போ போ! கொடூரமே உருவானால் போ போ! - ப.முருகன்

அமைதியைக் குலைத்தாய் போ போ
அழிவினை விதைத்தாய் போ போ
ஆக்கத்தை அழித்தாய் போ போ
அக்கிரமத்தை ஆதரிப்பாய் போ போ
இயல்பினைச் சிதைத்தாய் போ போ
இந்தியாவை கெடுத்தாய் போ போ

ஈவிரக்கம் ஒழித்தாய் போ போ
ஈனச்செயல் புரிந்தாய் போ போ
உண்மையை மறைத்தாய் போ போ
உரிமையைப் பறித்தாய் போ போ
ஊக்கத்தைப் புதைத்தாய் போ போ
ஊகங்களைப் பரப்புவாய் போ போ

எல்லாமும் கெடுத்தாய் போ போ
ஏற்றத்தாழ்வு வளர்த்தாய் போ போ
ஐக்கியம் சிதைத்தாய் போ போ
ஒற்றுமை கெடுத்தாய் போ போ
ஓங்கிப் பொய் உரைப்பாய் போ போ

அதானியை வளர்த்தாய் போ போ
அம்பானியை ஆதரித்தாய் போ போ

அமலாக்கத்துறை ஏவினாய் போ போ
வரித்துறையால் வறுத்தெடுப்பாய் போ போ
என்ஐஏ-வால் மிரட்டுவாய் போ போ
எதிர்த்தால் சிறையிடுவாய் போ போ

வம்படி வழக்கிடுவாய் போ போ
வெஞ்சிறையில் சாகடிப்பாய் போ போ
சாட்சிகளை மிரட்டிடுவாய் போ போ
சாகடித்துத் தப்பிப்பாய் போ போ
ஆட்சிகளை கவிழ்த்திடுவாய் போ போ
ஆட்களை வளைத்திடுவாய் போ போ
கூட்டாட்சி முறையொழிப்பாய் போ போ
கொடுஞ்செயல் புரிந்திடுவாய் போ போ
காட்டாட்சி நடத்திடுவாய் போ போ
கடுஞ்செயல்கள் செய்திடுவாய் போ போ

பொய்வழக்கு புனைந்திடுவாய் போ போ
புனைகதைகள் பரப்பிடுவாய் போ போ
அறிவியலை மறைத்திடுவாய் போ போ
கட்டுக்கதை கதைத்திடுவாய் போ போ
சமஸ்கிருதம் திணித்திடுவாய் போ போ
சண்டித்தனம் செய்திடுவாய் போ போ

விவசாயிகளை வஞ்சித்தாய் போ போ
இளைஞர்களை ஏமாற்றினாய் போ போ
பெண்களை அவமதிப்பாய் போ போ
பழங்குடியைப் பழித்திடுவாய் போ போ
மணிப்பூரை எரித்திடுவாய் போ போ
காஷ்மீரை கரைத்திடுவாய் போ போ

குழந்தைகளை குலைத்திடுவாய் போ போ
முதியோரை மிதித்திடுவாய் போ போ
தலித்துகளை தாக்கிடுவாய் போ போ
சமத்துவத்தை எதிர்த்திடுவாய் போ போ
கலவரம் நிகழ்த்திடுவாய் போ போ
கள்ளத்தனம் செய்திடுவாய் போ போ

சிறுமிகளைச் சீரழிப்பாய் போ போ
சீரழித்தவரை காத்திடுவாய் போ போ
பெண்களை நிர்வாணிப்பாய் போ போ
பலாத்காரித்து பலியிடுவாய் போ போ
மல்யுத்தத்தில் உள்குத்திடுவாய் போ போ
கயவர்களை கவுரவிப்பாய் போ போ

ஜனநாயகம் கொன்றிடுவாய் போ போ
சர்வாதிகாரம் செய்திடுவாய் போ போ
மன்றத்தை மதிக்காதாய் போ போ
உரிமைகளைப் பறித்திடுவாய் போ போ
சபைதனில் பேசாதாய் போ போ
மன்கீபாதில் முழங்குவாய் போ போ

மசூதிகளை இடித்திடுவாய் போ போ
தேவாலயம் தீயிடுவாய் போ போ
மக்களைப் பிரித்திடுவாய் போ போ
மனிதரை துவேஷிப்பாய் போ போ
மாபாதகம் செய்திடுவாய் போ போ
மாஞானியாய் நடித்திடுவாய் போ போ

சட்டத்தை மிதித்திடுவாய் போ போ
சகலமும் குலைத்திடுவாய் போ போ
நல்லிணக்கம் சிதைத்திடுவாய் போ போ
நயவஞ்சகம் புரிந்திடுவாய் போ போ
குயுக்தியான கும்பலானாய் போ போ
கூட்டமாய்க் கொலைபுரிவாய் போ போ

ஒற்றுமைக்கு உலைவைத்தாய் போ போ
வேற்றுமையை விதைத்திடுவாய் போ போ
மலர்ச்சரத்தை பிய்த்திடுவாய் போ போ
மணமதனை நாறடிப்பாய் போ போ
இந்தியாவை இடித்திடுவாய் போ போ
எதிரிலேயே நில்லாதே போ போ

கொடுமையே அறமானாய் போ போ
கொடூரமே உருவானாய் போ போ
கடுமையே இயல்பானாய் போ போ
கெடுமதியே செயலானாய் போ போ

ஆர்எஸ்எஸ் வழிநடந்தாய் போ போ
அராஜகம் தனைப்புரிந்தாய் போ போ
அமித்ஷாவை ஏவினாய் போ போ
அநியாயம் பல செய்தாய் போ போ
பரிவாரங்களை பாதுகாத்தாய் போ போ
பழிபாவம் அஞ்சாதிருந்தாய் போ போ

ஏழைகளை புறக்கணித்தாய் போ போ
செல்வர்களை வளர்த்திட்டாய் போ போ
வறுமையை அதிகரித்தாய் போ போ
வளப்பத்தை பெருக்கிட்டாய் போ போ
பெருநிறுவனங்கள் போஷிப்பாய் போ போ
சிறுநிறுவனங்கள் சிதைப்பாய் போ போ

அரசமைப்பை கைவிடுவாய் போ போ
மநுநீதி கடைப்பிடிப்பாய் போ போ
கல்விக்கு எதிரானாய் போ போ
கார்ப்பரேட்டின் வசமானாய் போ போ
காவிவழி பயணிப்பாய் போ போ
நீதிமுறை அழித்திடுவாய் போ போ

நீதியை வளைத்திடுவாய் போ போ
நெறிமுறை பிறழ்ந்திடுவாய் போ போ
சாதியைக் காத்திடுவாய் போ போ
சதித்திட்டம் தீட்டிடுவாய் போ போ
வேதமுறை கூறிடுவாய் போ போ
ஆதிகாலம் மேலென்பாய் போ போ

புல்டோசரால் இடித்திடுவாய் போ போ
புன்செயல்கள் புரிந்திடுவாய் போ போ
வன்முறைகள் செய்திடுவாய் போ போ
வன்கொடுமை நிகழ்த்திடுவாய் போ போ
இந்துத்துவம் பேசிடுவாய் போ போ
சமத்துவம் சாய்த்திடுவாய் போ போ

குடியுரிமை பறித்திடுவாய் போ போ
கொடுஞ்செயல் செய்திடுவாய் போ போ
பொதுச்சட்டம் என்றிடுவாய் போ போ
தனியுரிமை பறித்திடுவாய் போ போ

வாக்குறுதி கொடுத்திடுவாய் போ போ
காற்றுவழி விட்டிடுவாய் போ போ
ஒன்றரை விலை கண்மறைத்தாய் போ போ
இருகோடிவேலை ஏமாற்றினாய் போ போ
விலை ஏதும் குறைக்கவில்லை போ போ
வீண் ஜம்பம் பேசிடுவாய் போ போ

தேர்தல் பத்திரம் திணித்தாய் போ போ
ஊழலுக்கு வழிவகுத்தாய் போ போ
பிரான்சிலும் பிரபலமானாய் போ போ
பிரபஞ்சத்திலே முதலானாய் போ போ
உத்தரவாதம் சொல்லுவாய் போ போ
சத்தியமாய் செய்யாய் நீ போ போ

நாட்டுக்கு நலம்புரியாய் போ போ
நாட்டையே ஏமாற்றினாய் போ போ
நாட்டையே விற்றிடுவாய் போ போ
நண்பர்களுக்கே உற்றிடுவாய் போ போ
களவாணிகளுக்கே சலுகைகளே போ போ
கருவறுப்போம் கதைமுடிப்போம் போ போ

எரிதழல் எடுத்திடுவோம் போ போ
அரியணையை அகன்றிடு போ போ
இருமுறை அநீதிகளே போ போ
இனியுமா முடியாது போ போ
கோயபல்ஸ் கொடுமையே போ போ
பாசிசபாணி பாஜகவே போ போ