tamilnadu

உலக வில்வித்தை: இந்தியாவுக்கு வெள்ளி

யாங்க்டோன்,செப்.25- உலக வில்வித்தை சாம்பி யன்சிப் 2021 போட்டிகள் அமெ ரிக்காவின் யாங்க்டோன் நகரத்தில் நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டியில் கொலம்பியாவை இந்திய பெண்கள் மற்றும் கலப்பு ஜோடி வில்வித்தை அணி எதிர் கொண்டது. தரவரிசை சுற்றில் நான்காவது இடத்தில் இருந்த அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா வென்னம் ஆகிய இந்திய கலப்பு ஜோடி, தொடக்கத்தில் முன்னிலை வகித்தனர். ஆனால் இறுதியில் கொலம்பியா அணியினர் தனது ஆதிக்கத்தை செலுத்தினர். இத னால் இந்திய வீரர்கள் நான்கு புள்ளிகள் வித்தியாசத்தில் (150-154) கொலம்பியாவிடம் வீழ்ந்து வெள்ளிப்பதக்கம் பெற்றனர். மற்றொன்றில் ஜோதி, முஸ்கான் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோரை கொண்ட பெண்கள் அணியினர் சாரா லோபஸ், அலெக்சாண்ட்ரா உஸ்கியானோ மற்றும் நோரா வால்டெஸ் ஆகி யோரை எதிர்கொண்டனர். இந்த அணியானது ஐந்து புள்ளிகள் வித்தியாசத்தில் (224-229) தோற்று வெள்ளிப்பதக்கத்தைப் பெற்றது.

;