tamilnadu

img

ஏன் கொண்டாடுகிறோம்? - வல்லம் தாஜூபால்

கமழும் மலரெல்லாம் நேசிக்கும் பெண்கள்
தமிழ்நாட்டில் ஒருமலரை வெறுக்கின்றாரே...
ஈரோட்டில் ஒலித்தகுரல் இன்று உ.பி.யிலும்
பாராட்டும் குரலாகப் பரவி யுள்ளதே...
அதனால் கொண்டாடுகிறோம்.

சிறுபான்மை மேலே சேற்றை வீசியவர்
பெரும்பான்மை தனித்துப் பெறவில்லையே...
காலில் மிதித்தவரே அரசியல் சாசனத்தை
கையில் எடுத்து கண்களில் ஒற்றுகிறாரே...
அதனால் கொண்டாடுகிறோம்.

நானூறு என்ற நாசிசக் கனவு
இருநூற்று நாற்பதாய் இளைத்ததே...
ஆட்டத்தைத் தன்முனைப்பாய்ப் போட்டவரைக்
கூட்டாட்சி யெனக்கூற மாற்றியதே காலம்...
அதனால் கொண்டாடுகிறோம்.

ஆலயம் கட்டிய அயோத்தி யிலேயே
காலை வாரிக் கவிழ்த்தனர் வாக்காளர்...
ஒரே பண்பாடு ஒரே வழிபாடு
ஏற்காமல் மக்கள் இருக்கிறார் விழிப்போடு...
தனிநபர் கேரண்டி ஆகவில்லை செல்லுபடி
பிறர்கருத்தைப் புறக்கணித்தால் ஆகும்இனி குளறுபடி...
அதனால் கொண்டாடுகிறோம்.

தீயின் மிச்சத்தை அணைக்கவும்
பாசிசத்தின் மிச்சத்தை அழிக்கவும்
மேலும் முன்னேறுகின்றோம்.

;