tamilnadu

img

தொழில்நுட்ப கதிர்

புதிய வடிவில் வருகிறது விண்டோஸ் 11 ஸ்டார்ட் மெனு!

மறுவடிவமைப்பு செய்யப்பட்ட விண்டோஸ் 11 இயங்குதளத்திற்கான ஸ்டார்ட் மெனுவை (Start Menu) மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. 300க்கும் மேற்பட்ட விண்டோஸ் 11 பயனர்களுடன் இணைந்து மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் வடிவமைப்பா ளர் குழு, புதிய வடிவிலான ஸ்டார்ட் மெனுவை உருவாக்கி யுள்ளது. செயலிகள், கோப்புகள் உள்ளிட்டவற்றை விரை வாகக் கண்டறியும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. புதிய வடிவிலான ஸ்டார்ட் மெனுவில், அழைப்புகள், மெசேஜ்கள் மற்றும் கோப்புகள் விரைவாக அணுகலாம் எனவும், இதில் தனிப்பயனாக்கப்பட்ட விருப்பங்களை தேர்ந்தெடுத்து செயலிகளை பயன்படுத்த முடியும் எனவும், முக்கிய பணிகளை நெறிப்படுத்தவும் உதவும் என்றும் மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. மேலும், விண்டோஸ் இன்சைடரில் இதனை சோதனை செய்து வருவதாகவும், வரும் மாதங்களில் இந்த புதிய வடிவிலான ஸ்டார்ட் மெனு பயன்பாட்டுக்கு வரும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையில் ‘ஹே கோபைலட்’!

சிரி, கூகுள் அசிஸ்டன்ஸ், அலெக்சா ஆகிய வாய்ஸ் அசிஸ்டன்ஸ் போலவே, ‘ஹே கோபைலட்’ என்று சொன்னவுடன் கோபைலட் செயலியை செயல்படுத்தும் அம்சத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சத்தை செயல்படுத்த settings-க்கு  சென்று அனுமதி வழங்க வேண்டும்.  Offline Mode-லும் ‘ஹே கோபைலட்’ என்று சொன்னவுடன் கோபைலட் செயலியை செயல்படுத்த முடியும். ஆனால் கோபைலட் செயலியில் பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க இண்டர்நெட் வசதி தேவை என்பது குறிப்பிடத்தக்கது.  குரல் மூலம் இயக்கப்படும் கோபைலட் பதிப்பு 1.25051.10.0 அல்லது அதற்கு மேற்பட்ட பதிப்பில் ஆங்கில மொழியில் கிடைக்கிறது. 

கூகுள் லோகோ மாற்றம்!

கூகுள் நிறுவனம் அதன் கூகுள் சர்ச்சின் (Google Search) லோகோவை 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாற்றியுள்ளது. கூகுள் சர்ச்சின் லோகோ கடைசியாக 2015 செப்டம்பர்  மாதத்தில் அப்டேட் செய்யப்பட்டது. அதில் G என்ற எழுத்து சான்ஸ்-செரீப் எழுத்துருவில், சிவப்பு, மஞ்சள், பச்சை மற்றும் நீலம் ஆகிய நான்கு தனித்தனி வண்ணங்களைக் கொண்டிருந்தது. தற்போது,  புதிய கூகுள் சர்ச் லோகோவில் இந்த நான்கு வண்ணங்களும் ஒன்றிணைந்து காணப்படுகிறது. இந்த புதிய லோகோ முதலில் ஆப்பிள் ஐபோன் பயனர்கள் மற்றும் கூகுளின் பிக்சல் போன் பயனர்களுக்கு மட்டும் கடந்த மே 12 இல், வெளியிடப்பட்டது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் இந்த புதிய லோகோ விரைவில் அப்டேட் செய்யப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.