கொரோனா கொடுமைகள் - கதறும் விவசாயக் கூலிகள், தலித் மக்கள்
கொரோனா பரவலை யடுத்து தமிழகத்தில் ஐந்தாம்கட்ட ஊரடங்கு ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துவக்கத்தில் தமிழக அரசு பணமாக ரூ.1000 இலவசமாக வழங்கியுள்ளது. ரேசன் கடைகளில் இலவசப் பொருட் கள் வழங்கியது. மற்றபடி குறைந்த பட்சம் ஒரு நேரம் பட்டினி என்ற நிலை யில் தான் உழைப்பாளிகளின் வாழ்க்கை குறிப்பாக கிராமப்புற மக்க ளின் வாழ்க்கை இருந்துள்ளது. அது இன்னும் தொடர்கிறது என்பதுதான் சோகம். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி யை அடுத்துள்ளது கல்லங்குத்தல். இங்கு தலித்மக்கள் பெருவாரியாக வசித்துவருகின்றனர். பெரும்பாலா னவர்கள் விவசாயக்கூலிகள். இவர் களுக்கு 100 நாள் வேலை முழுமை யாக வழங்கப்படவில்லை. 45 வய திற்கு மேற்பட்டவர்களுக்கு வேலை யில்லை. இங்குள்ள 200 பேருக்கு மாமதுரையின் அன்னவாசல் திட்டம் கைகொடுத்துவருகிறது. திங்களன்று காலை அந்த ஊருக்குச் சென்றபோது தேங்காய் சாதம் ரெடியாகிக் கொண்டி ருந்தது. அதை பொட்டலமாக போடுவ தற்கு தொண்டர்கள் தயார் நிலை யிலிருந்தனர். அவர்களிடம் பேசிய போது, கிட்டத்தட்ட 50 நாட்களுக்கும் மேலாக வெங்கடேசன் எம்.பி., முயற்சியால் உணவு கிடைக்கிறது. எங்கள் ஊரில் உள்ள தோழர் முரு கன் இந்தப் பணியை முழுமையாகச் செய்துவருகிறார். கொரோனா காலத்தில் ஒரு வேளை உணவு கிடைப் பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. கிலோ 10 ரூபாய்க்கு விற்ற கத்த ரிக்காய் 20 ரூபாய்க்கு விற்கிறது. பெரும்பாலும் காய்கறிகளின் விலை இரட்டிப்பாகவே இருந்தது என்றனர்.
தமிழக அரசு ஒரே ஒரு முறை ஆயி ரம் ரூபாய் வழங்கியது. ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ ஜீனி, ஒரு கிலோ பருப்பு வழங்கியது. ஆனால் எங்கள் குடும்பத்தில் 10 பேர் உள்ளனர் எனக் கூறிய கல்லங்குத்தல் வனிதா, ரேசன் பொருட்கள் முழுமையாக ஒரு முறை தான் கிடைத்தது. மறு முறை வாங்கச் சென்றபோது ஒரு கிலோ என்பது அரை கிலோவாக வெட்டப்பட்டது. யாருக் கும் ரேசன் அரிசி முழுமையாக வழங் கப்படவில்லை. 20 கிலோ என்றால் 18 கிலோ, 15 கிலோ என்றால் 12 கிலோ இப்படித்தான் கிடைத்தது. ரேசனில் அரிசி தரமாக இல்லையென்றார். எங்கள் குடும்பங்கள் மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கும். அரசு வழங்கிய ஆயிரம் ரூபாயும் தலா ஒரு கிலோ ஜீனி, பருப்பு போதுமானதாக இல்லை. மாதம் தோறும் ரூ.7,500 வழங்க வேண்டுமென்றார்.
இதே ஊரைச் சேர்ந்த தங்க முனியம்மாள் கூறுகையில், “எங்கள் குடும்பத்தில் எட்டுப்பேர் உள்ளனர். தமிழக அரசின் இலவசப் பொருட்கள் எனக்குக் கிடைக்கவில்லை. ரேசன் விநியோகம் முறையாக இல்லை. எடை மிகவும் குறைவாக உள்ளது. அரசு கொடுத்த ஆயிரம் ரூபாய் எட் டுப்பேருக்கு எப்படிப் போதுமான தாக இருக்கும். கொடுப்பது போல் கொடுத்தார்கள். விலைவாசி இரட்டிப்பான நிலையில் அது போன இடம் தெரியவில்லை. 100 நாள் வேலை எங்களில் பெரும்பாலோருக்கு கிடைக்கவில்லை. தமிழக அரசு செப்டம்பர் மாதம் வரை இலவசப் பொருட்கள் வழங்க வேண்டும். அதை எடைகுறைவின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றார். பெருவாரியான கிராமமக்கள் எங்களுக்கு 100 நாள் வேலை அவ சியம் வேண்டும். அதை பாரபட்ச மின்றி அனைவருக்கும் வழங்க வேண்டுமென்றனர்.
அந்த ஊரில் உள்ள இளைஞர்கள் சிலரிடம் பேசியபோது, “ மாதம் குறைந்தது ஐந்தாயிரமாவது தமிழக அரசு வழங்கவேண்டும். ரேசன் கார்டு கள் மூலம் அரசு வழங்கும் இலவசப் பொருட்களை முறையாக தர வேண் டும் என்றனர்.
சுயஉதவிக் குழுக்களின் கொடுமை
கிராமத்தைச் சேர்ந்த பெண்களில் பெரும்பகுதியினர் ஏதாவது ஒரு சுயஉதவிக்குழுவில் உள்ளனர். இந்த ஊரைச் சேர்ந்த பெண் ஒருவர் சொந்த வீட்டு பட்டாவை கொடுத்து ரூ.80 ஆயி ரம் கடன் பெற்றுள்ளார். வேலை யில்லாத இந்தத் தருணத்தில் மாத தவணையை முறையாகக் கட்டுங்கள், வட்டிக்கு வட்டி போடுவோம். வீட்டை “சீல்” வைத்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சுயஉதவிக்குழு ஊருக்குள் புகுந்து இந்த மாத தவ ணையை ஜூன் 3-ஆம் தேதிக்குள் கட்ட வேண்டும். இல்லையென்றால் வட்டிக்கு வட்டி போடுவோம். பத்து மாதம் கட்ட வேண்டிய தொகையை 14 மாதம் கட்ட வேண்டுமெனக் கூறி யுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இந்தக்கிராமத்தில் பல சுயஉத விக்குழுக்கள் முகாமிட்டு பெண்களை மிரட்டி வருகின்றனர்.