tamilnadu

img

சிபிஎம் நீலகிரி மாவட்டச் செயலாளராக வி.ஏ.பாஸ்கரன் தேர்வு - வி.ஏ.பாஸ்கரன்

மாநாட்டில்  80 தீக்கதிர் சந்தா உள்ளிட்ட சந்தாகளுக்கான தொகை  என்.குணசேகரனிடம் வழங்கப்பட்டது. 

பந்தலூர், அக். 24 - மார்க்சிஸ்ட் கட்சியின் நீலகிரி மாவட்ட மாநாடு அக்.23, 24 ஆகிய  தேதிகளில் பந்தலூரில் எழுச்சிகர மாக நடைபெற்றது. மாநாட்டை துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஆ.பத்ரி வாழ்த்துரையாற்றினர். கட்சியின் செங்கொடியை மாவட்டக்குழு உறுப் பினர் வி.வி.கிரி ஏற்றி வைத்தார்.  முன்னதாக, மறைந்த மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே. தங்கவேல் நினைவு ஜோதி பயணம்,  நீலகிரி மாவட்ட முன்னாள் செயலா ளர் தோழர் எல்.தியாகராஜன் நினைவு  ஜோதி பயணம், முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள் டி.காந்தி, பி.தமிழ்மணி, வி.டி.ரவிச்சந்திரன் ஆகியோர்கள் நினைவு ஜோதி பயணம் நடைபெற்றது.

தீர்மானங்கள்

நீலகிரி மாவட்டத்தில் மின்சார இல்லாத அனைத்து குடும்பங் களுக்கும் மின்சாரம் வழங்கவேண் டும். நீலகிரி மாவட்டத்தை சுற்றுலா  மண்டலமாக்கி, மசினகுடி உள்ளிட்ட  வனப்பகுதிகளில் எலைட் நெடுஞ் சாலை அமைக்க வேண்டும். உதகை யில் சிறு விமான நிலையம் அமைக்கப் பட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணி களுக்கு போக்குவரத்து வசதி ஏற் படுத்தி தர வேண்டும். பசுந்தேயிலை க்கு ரூ.30 அடிப்படை விலை வழங்க வேண்டும். அனுபவ நிலங்கள் வைத்திருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும். உதகை, கூடலுர் நகரங் களில் நிலவிவரும் வாகன நெரிச்ச லுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். கூடலூர் பகுதியில் பொறியியல் மற்றும் வேளாண் கல்லூரி அமைக்க வேண்டும், டேன் டீயை பாதுகாக்க வேண்டும். வனவிலங்கு – மனித மோத லுக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடு க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மேலும், மாநாட்டு முடிவுகளை மக்கள் மத்தியில் எடுத்து செல்லும் வகையில் நவ. 7 ஆம் தேதியன்று மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

புதிய மாவட்டக்குழு தேர்வு

இம்மாநாட்டில், மாவட்ட செய லாளராக வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக ஏ.யோ கன்னன், ஏ.குஞ்சு முகமது, கே.ராஜன், ஆர்.ரமேஷ், சி.வினோத், எல்.சங்கர லிங்கம், கே.சுந்தரம், எஸ்.ஆர்.ஆதிரா உள்ளிட்ட 30 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் 80 தீக்கதிர் நாளித ழுக்கான சந்தாவும், 25 பிப்பிள் டெமோ கிரசி சந்தாவும் மாநில செயற்குழு உறுப் பினர் என்.குணசேகரனிடம் வழங்கப் பட்டது. மாநிலக்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் நிறைவுரையாற்றினார்.

 

;