tamilnadu

அமெரிக்கா- ரஷ்ய அதிகாரிகள் பேச்சுவார்த்தை

அமெரிக்கா - ரஷ்ய அதிகாரிகள் சவூதி அரேபியாவில்  உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி நான்கு மணி நேரத் திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி யுள்ளனர். பேச்சுவார்த்தைகள் ஆக்கப்பூர்வமாக இருந்தது எனவும்  அமெரிக்கா மற்றும் ரஷ்ய ஜனாதிபதிகளுக்கு இடையேயான சந்திப்பு  நடத்துவது குறித்தும் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டதாகவும் ரஷ்ய பிரதிநிதி  யூரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். அடுத்த வாரமும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இல்லை. ஆனால் தற்போதைய  பேச்சுவார்த்தையில் அமெரிக்கா காட்டும் வேகம்  போரை முடிவுக்கு கொண்டுவருவதில் அதன் முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டு கின்றது என யூரி குறிப்பிட்டுள்ளார்.  பேச்சுவார்த்தையில் உக்ரைனை உறுப்பி னராக நேட்டோ ஏற்றுக்கொள்ளாது என அறி வித்துள்ளது மட்டும் போதாது.  2008 இல் புகாரெஸ்ட் நகரில்  நடந்த உச்சிமாநாட்டில் எதிர்காலத்தில் குறிப்பிடப்படாத தேதியில் உக் ரைனை நேட்டோ உறுப்பினராக இணைப் போம் என  கொடுத்த வாக்குறுதியை ரத்து செய்ய வேண்டும். அதுதான் பேச்சுவார்த்தை யை முன்னேற்றும் என  ரஷ்ய வெளியுறவுத் துறை  அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா குறிப்பிட்டுள்ளார். இதற்கு நேட்டோ கூட்டமைப்போ, அமெ ரிக்காவோ எந்த பதிலும் கூறவில்லை.