tamilnadu

img

ரயில் சலுகைகளை பறித்த ஒன்றிய அரசு.... மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்....

மதுரை:
கொரோனா பேரிடர் காலத்தில்  ரயில்வே நிர்வாகம் சிறப்பு ரயில்களை இயக்குகிறது. இதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட கட்டணச்  சலுகை பயன்கள் வழங்கப்படவில்லை.  சாதாரண காலங்களைவிட  ரயிலில் கூடுதல்  கட்டணம் வகுலிக்கப்படுகிறது . மாற்றுத்திறனாளிகளிட ரயில்வே நிர்வாகம் கூடுதல் கட்டணம் பெறுவதை கைவிட்டு பறிக்கப்பட்ட கட்டணச் சலுகைகளை மீண்டும் வழங்க  வேண்டும்.

நடைமேடைக் கட்டணம் ரூ .50 உயர்வைக் கைவிட வேண்டும். மதுரை ரயில் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் இலவசமாக வாகனம் நிறுத்த  ஏற்பாடு செய்ய வேண்டும்.மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை  தமிழக அரசு ரூ. ரூ.3,500 உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஒன்றிய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் புதனன்று 60 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரையில் நடைபெற்ற போராட்டத்தில் மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். நம்புராஜன், மாவட்டத் தலைவர் டி. நாகராஜ், செயலாளர் பி. வீரமணி, மாவட்டத்  துணைத்தலைவர் ஏ.பாண்டி, மாவட்ட நிர்வாகிகள் டி .குமரவேல், ப.தங்கவேல், வி. மாரியப்பன், ஏ. நேரு, ஏ.பாலமுருகன், மனோகரன்,  வி.வனிதா உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். தொடர்ந்து ரயில்வே மேலாளரைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

இராமேஸ்வரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் ஜி.சிவா, மாற்றுத் திறனாளி சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளர்  கே.கருணாகரன், அவர்கள் அசோக்,  குமார், செல்வம், ஞானமுத்து, ராஜ்குமார், இலட்சுமணன், சாதிக் ராஜா, கிருஷ்ணகுமார், வசந்தகோகிலம், மெர்லின், கோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை
சிவகங்கை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் இன்னாசி ராஜா, கொங்கையா, மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்க பூபதி, செந்தில் செய்யது அலி, மனோகரன் வைரமணி ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.மானாமதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்டத்  துணை தலைவர் மலர்விழி,  சங்கர், அம்பேத்கார்,  திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி, ஒன்றியச் செயலாளர் ஆண்டி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் விஜயகுமார்,  பூமிநாதன் வடிவேலு ராஜேந்திரன் பூரண கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;