tamilnadu

img

திருச்சி ஸ்பார்க் மாணவர்கள் கலக்கல்

வாலிபர் சங்க விளையாட்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பிரிவுகளிலும் திருச்சி ஸ்பார்க் கழகதைச் சிறந்த மாணவர்கள் அசத்தலாக விளையாடினர். நிறைய பிரிவுகளில் முதலிடம் பிடித்தனர். பெரும்பாலான பிரிவுகளில் முதல் 3 இடங்களில் 2 இடங்கள் ஸ்பார்க் கையில் தான் உள்ளது. சொல்லப்போனால் இந்தத்தொடரில் ஸ்பார்க் கழகம் தான் அனைத்து போட்டியாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. ஸ்பார்க் கழக பிரிவினரை கண்டாலே மற்ற பிரிவினர் ஒருவித தயக்கத்துடன் போட்டியை எதிர்கொண்டனர். வரும் காலத்தில் சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனைகள் ஸ்பார்க் விளையாட்டு கழகத்தில் கண்டிப்பாக முளைப்பார்கள். மாநிலம், தேசம் ஏன் ஒலிம்பிக் கூட கண்டிப்பாக செல்வார்கள், சாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம் அந்த விளையாட்டு குழுமத்தின் கட்டுக்கோப்பான பயிற்சி தான். இந்த ஸ்பார்க் விளையாட்டு கழகத்தின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் திருச்சி முன்னாள் வாலிபர் சங்க விளையாட்டு கழக தலைவராக இருந்த துர்கா என்பவர் ஆவார்.

;