tamilnadu

img

நடத்துநர் மகளுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேரில் பாராட்டு

நடத்துநர் மகளுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நேரில் பாராட்டு

பத்தாம் வகுப்பு தேர்வில் முதலிடம்

கும்பகோணம், மே 18-  தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் மண்டலத்தில் பணிபுரியும் நடத்துநர் வெங்கடேசன் மகள் சோபியா 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றதை அடுத்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர், பொதுமேலாளர் ஆகியோர் பாராட்டினர். நடத்துநராக பணிபுரியும் வெங்கடேசன் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற சோபியா ஆகியோரை நேரில் அழைத்து, நிர்வாக இயக்குநர் இரா. பொன்முடி, பொதுமேலாளர் முத்துக்குமாரசாமி இனிப்புகள், பரிசு வழங்கி பொன்னாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.  அரசு போக்குவரத்து கழக துணை மேலாளர்கள், உதவி மேலாளர்கள், கிளை மேலாளர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள், அலுவலக பணியாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.