tamilnadu

img

நாகர்கோவில் மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

ஊரக வேலை உறுதி திட்டத்தில் தீண்டாமை கடுக்கரை ஊராட்சி தலைவர் மீது புகார்

நாகர்கோவில், ஆக.21- குமரி மாவட்டத்தில் தலித் மக்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் செயல்படும் கடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர்  மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது: குமரி மாவட்டம் கடுக்கரை பகுதி யில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் அப் பகுதியில் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதில் ஏராளமானோர் பங்கேற்று பல்வேறு வகையான வேலைகளில் ஈடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடுக் கரை ஊராட்சி மன்ற தலைவர் இத்திட்டத் தின் கீழ் பணியாற்றும்  தலித் மக்களை மட்டும் ஒரு குழுவாக பிரித்து அப்பகுதி யில் உள்ள சாக்கடைக் கழிவுகளை அள்ளக் கூறியும், மனிதக்கழிவுகளை எந்த வித உபகரணங்களை கொடுக்காமலே அகற்றவும் கட்டாயப்படுத்தி வருகிறார். மேலும் தலித் மக்களை மட்டும் இந்த பணிகளை செய்யும்படி கட்டாயப்படுத்தி வருகிறார். எனவே தலித் மக்கள் மீது தீண்டாமை எண்ணத்துடன் பாரபட்சமாக செயல்படும் கடுக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மீது தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. 

குடும்ப அட்டைகள் பதிவதில் தாமதம் : நீண்ட நேர காத்திருப்பில் பொதுமக்கள் 

தூத்துக்குடி,ஆக.21- நியாயவிலை கடையில் மின்சாரம் இல்லாத காரணத்தால் மின்னணு இயந்தி ரம் மூலம் குடும்ப அட்டை பதிவதில் சிக்கல் ஏற்படுவதால் பொதுமக்கள் பொ ருட்களை வாங்க நீண்ட நேரம் காத்தி ருப்பதாகவும் , அலைக்கழிப்படுவதாவும் புகார் எழுந்துள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட கால்டுவெல்காலனி பகுதியில் 26AA015  எண் கொண்ட நியாயவிலை கடை அரசுக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல்  நியாய விலைக் கடையில் மின்னணு குடும்ப அட்டைகள் ( ஸ்மார்ட் கார்டு)  மூலம் பொ ருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கால்டுவெல் காலனி யில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை யில் இதுநாள் வரை அங்கு மின் இணைப்பு இல்லாமலே இயங்கி வருவதாக கூறப் படுகிறது.இதனால் நியாயவிலை கடை ஊழியர்கள் முந்தைய தினம் வீட்டிற்கு மிஷினை கொண்டு சென்று சார்ஜ் செய்து வந்து பொருட்களை வழங்கி வருகின்ற னர். ஆனால் பாயின்ட் ஆப் சேல்ஸ் மிசி னில் நாள் முழுவதும் மின்சேமிப்பு நிற்ப தில்லை.  இதனால் நாள் ஒன்றுக்கு குறைந்த எண்ணிக்கையிலான அட்டை தாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. இத னால்   தினமும் கடைக்கு சென்று காத்திருந்து பின் திரும்புவதால் நேரம் வீணடிக்கப் பட்டு, அலைக்கழிக்கும் நிலைக்கு தாங்கள் ஆளாகுவதாகவும்   தங்களின்  சிர மங்களுக்கு நியாயவிலைக்கடையில் மின் இணைப்பு இல்லாததே காரணம் என்றும், இது குறித்து சம்மந்தப்பட்ட அதி காரிகள் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பு கின்றனர். இதற்கு தீர்வு எட்டப்படா விட்டால்  போராட்டம் நடத்த போவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெட்ரோல் பங்க்கில் ரூ.28 லட்சம் மோசடி : விற்பனையாளர் மீது புகார் 

தூத்துக்குடி,ஆக. 21- தூத்துக்குடியில் பெட்ரோல் பங்கில் பில் போடாமல் ரூ.28 லட்சம் மோசடி செய்ததாக விற்பனையாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கனி ஏஜென்சி பெட்ரோல் பங்க்கில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 9வது தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் பாலசுப்பிரமணியன் (27) என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். பெட்ரோல் போடுவது, அதற்குரிய பணத்தை வாங்குவது இவரது பணியாகும். இந்த நிறுவனத்தில் தூத்துக்குடி மடத்தூரைச் சேர்ந்த ஜேசு பாண்டியன் மகன் ராஜகோபாலன் (65) என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார் இவர் நிறுவனத்தின் வரவு செலவு கணக்குகளை சரிபார்த்த போது ரூ. 27 லட்சத்து 97 ஆயிரத்து 618 ரூபாய் கையாடல் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. விற்பனையாளரான பாலசுப்பிர மணியன் 48,377 லிட்டர் டீசல் நிரப்பி  அதற்குரிய பில் போடாமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.  இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் ராஜகோபாலன், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித் துள்ளார். புகாரின் பேரில்  வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் விசாரணை நடத்தி வருகிறார்.

;