tamilnadu

30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுதில்லி, அக். 20 - ஒரே நாளில் 30 விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது நாடு  முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 3 மாதங்களாக நாட்டின் பகுதி களில் விமான நிலையம், விமானங்கள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை என தொடர்ச்சியாக செல்போன் அழைப்பு, மின்னஞ்சல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதள மிரட்டல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது வாடிகையான சம்பவ மாக உள்ளது. ஆனால் மோடி அரசோ வெடி குண்டு மிரட்டல் தொடர்பாக அலட்சியமாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த 6 நாட்களில் 70 விமானங்களுக்கு செல்போன் அழைப்பு, மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டல்கள் அனைத்தும் புரளி என கூறப்பட்டாலும் பய ணிகள், விமான நிறுவனங்கள் பீதியடைந்துள் ளனர். குறிப்பாக இந்தியர்கள் விமானங் களில் பயணிக்கவே அஞ்சி, பயணங்களை ரத்து செய்து வருகின்றனர்.

விமானங்களுக்கும்  தனித்தனியாக மிரட்டல்

கடந்த மாதம் ஜெய்ப்பூர், மும்பை,  கொல்கத்தா என விமான நிலையங்களுக்கு மட்டுமே வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரு படி மேலே சென்று விமானங்களுக்கு தனித்தனி யாக மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. சனி யன்று நள்ளிரவு மற்றும் ஞாயிறன்று காலை இந்திய விமான நிறுவனங்களான ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், விஸ்தாரா, ஸ்பைஸ்ஜெட், ஸ்டார் ஏர் மற்றும்  அலையன்ஸ் ஏர் விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி யாகியுள்ளன. ஞாயிறன்று காலை மட்டும்  இந்திய விமான நிறுவனங்களை சேர்ந்த  சுமார் 30 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அதில் அதிகபட்ச மாக விஸ்தாரா ஏர் நிறுவனத்தின் 6 விமானங் களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப் பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. விஸ்தாரா நிறுவனத்தின் மும்பையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் உள்ளிட்ட 6 விமானங்களுக்கு மர்ம  நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள தால், பயண நேரம் மாற்றம் மற்றும் பயணம் ரத்து தொடர்பான நடவடிக்கைகள் அரங்கேறியுள்ளன.

காணாமல் போன  அமைச்சர் ராம் மோகன்

வழக்கம் போல விமானங்களுக்கு வெடி குண்டு மிரட்டல் விடுக்கப்படும் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக ஒன்றிய அரசு கூறியுள்ளது. ஆனால் நடவடிக்கையின் தன்மை குறித்து ஒன்றிய அரசு தெளிவாக இதுவரை அறிக்கை வெளியிடவில்லை. போலி வெடி குண்டு மிரட்டல்களை சமாளிக்க புதிய விதி களை கொண்டு வர உள்ளதாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் (தெலுங்கு தேசம்) சமீபத்தில் பேட்டி  ஒன்றில் கூறி இருந்தார். அதன்பிறகு அவரை காணவில்லை. அவர் வெளியிட்ட அறிவிப்பு கிடப்பில் உள்ள நிலையில், மீண்டும் வெடி குண்டு மிரட்டல்கள் தீவிரமடைந்து வருகிறது.