தூத்துக்குடி திரேஸ்புரத்தில் ஞாயிறன்று காலை 8 மணியளவில் தூத்துக்குடி ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக 100வது வார மரம் நடும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மரம் நட்டார். டிரஸ்ட் தலைவர் மோகன்தாஸ், உறுப்பினர்கள் கமல் தனசேகர், தினேஷ்குமார், இளம்பரிதி, மனோகரன், ஜெயபாரதி உட்பட பொது மக்கள் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.