tamilnadu

வில்சன் படுகொலை தீவிரவாதிகளுக்கு உதவிய பொறியாளருக்கு போலீஸ் வலை?

நாகர்கோவில், ஜன.17- குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி  ஆய்வாளர் வில்சன் கொலையில் தலைமறைவாக இருந்த குற்ற வாளிகள் திருவிதாங்கோடு பகுதி யைச் சேர்ந்த அப்துல் சமீம், நாகர்கோவில் இளங்கடைபகுதியை சேர்ந்த தௌபீக் ஆகிய இருவ ரையும் ஜன.14 அன்று கர்நாடகா மாநி லம் உடுப்பியில் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் தமிழக காவல் துறையினரிடம் ஒப்ப டைக்கப்பட்டு, வியாழனன்று குமரி  மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட னர்.  பின்னர் களியக்காவிளை காவல்  நிலையம் மற்றும் தக்கலை காவல்  நிலையத்தில் வைத்து காவல் துறை யினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். பின்னர் வியாழனன்று இரவு குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்க ப்பட்டுள்ளனர்.  இவர்கள் இருவரையும் 15 நாள்  காவல்துறை காவலில் எடுத்து விசா ரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு பின்பே இவர்கள் எந்த இயக்கத்துடன் தொட ர்பில் இருந்தனர். ஐ.எஸ். இயக்கத்து டன் தொடர்பு உண்டா? என்பதை உறு திப்படுத்த முடியும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். 

மேலும் இவர்களிடம் இருந்து கொ லைக்கு பயன்படுத்திய துப்பாக்கி  மற்றும் கத்தி கைப்பற்றப்பட வில்லை. அந்த துப்பாக்கி மற்றும் கத்தியை இவர்கள் தங்களது கூட்டா ளிகளுக்கு கைமாற்றி இருக்கலாம் என தெரிகிறது. எனவே இந்த துப்பா க்கியை பறிமுதல் செய்யும் நடவ டிக்கையிலும் தனிப்படை காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.  தவ்பீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் கேரள மாநிலம் நெய்யா ற்றின்கரையில் ஒரு வாடகை வீட்டில்  தங்கி இருந்தனர். திருவனந்தபுரம் விதுரா பகுதியை சேர்ந்த கம்ப்யூ ட்டர் இன்ஜினியர் சையது அலி என்பவர்தான், இவர்களுக்கு வீடு வாடகைக்கு எடுத்து கொடுத்தி ருந்தார். அவர் உதவியுடன் கொலை  நடந்த அன்று காலை, இவர்கள் இரு வரும் கையில் பையுடன், நெய்யாற்றி ன்கரை பகுதியில் சுற்றி திரிந்த வீடியோ காட்சிகள் கிடைத்தன. எனவே சையது அலி பிடிப ட்டால் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கி எங்கு இருக்கிறது என்பது தெரிய வரும் என தனிப்படை காவல் துறையினர் கூறினர். காவலில் எடுத்த பின்னரே இது பற்றிய முழு விவரங்க ளையும் கூற முடியும் என காவல் துறை யினர் தெரிவித்துள்ளனர்.

கைதான தீவிரவாதிகள் அப்துல்  சமீம், தவ்பீக் ஆகியோரை காவல்து றையினர் காவலில் அனுமதிக்க கூடாது என்று கேட்டு நீதிபதியிடம் மனுத் தாக்கல் செய்ய வழக்க றிஞர்கள் அப்துல் நிஜாம், அஜ்மல் ஹசாலி மற்றும் இப்ராகிம் பாதுஷா  ஆகியோர் குழித்துறை நீதி மன்றத்தில் முன்னதாக வருகை தந்து காத்திருந்தனர். காவல் துறை யினர் குற்றவாளிகள் இருவரையும் குழித்துறை நீதிமன்றத்தில் இரண்டா வது நீதித்துறை நடுவர் மன்ற அறையில் அழைத்து சென்றனர். அப்போது வழக்கறிஞர்கள் அவர்க ளுடன் செல்ல முயன்ற போது உடன்  வந்த கமாண்டோ படையினர் அவர்களை உள்ளே செல்ல அனுமதி  மறுத்தனர். அதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் அங்கிருந்து வெளி யேறி காரில் செல்ல முயற்சித்தனர். காரில் சென்ற அவர்களை அந்த பகு தியை சேர்ந்த சிலர் அவர்களின் கார்  கண்ணாடியை தாக்கி உடைத்து தாக்குதல் நடத்தினர். இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

;