தூத்துக்குடி, ஜூன் 21- தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறுந்தகடை செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர்செ.ராஜூ வெளியிட்டார். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் வெள்ளி யன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறுந்தகடை வெளி யிட்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் வீ.ப.ஜெயசீலன், திருவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.