tamilnadu

img

மோடி ஆட்சியில் நீதித்துறையும் தப்பவில்லை பார் கவுன்சில் உறுப்பினர் ஏ.கோதண்டம் பேச்சு

மதுரை, மார்ச்1- மோடி ஆட்சியில் நீதித்துறையும் தப்ப வில்லை அது பெரும் சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது என வழக்கறிஞர் சங்க மாநில செயல் தலைவரும் பார்கவுன்சில் உறுப்பினருமான ஏ.கோதண்டம் பேசினார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் “அரசியல் அமைப்பு சட்டம் எதிர் கொள்ளும் தற்போதைய சவால்கள்” என்ற தலைப்பில் மதுரையில் கருத்தரங்கம் நடை பெற்றது. அதில் கலந்துகொண்டு ஏ.கோதண்டம் பேசியதாவது:- நீதித்துறை இன்றைக்கு மிகப் பெரும் சீரழிவைச் சந்தித்து வருகிறது. எந்த ஒரு அகழ்வாய்வு ஆதாரமும் இல்லாத ராமர் கோவில் பிரச்சனைக்கு கொடுத்த முக்கி யத்துவத்தை தில்லியில் நடைபெறும் கல வரத்திற்கு உச்சநீதிமன்றம் கொடுக்க வில்லை, நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்திருக்க வேண்டும். மாறாக நீதிபதிகள் மோடியை புகழ்ந்து தள்ளுகிறார்கள்.  போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியம் குறித்து போராட்டம் நடத் தியபோது உயர்நீதிமன்றம் அவர்களை உட னடியாக வேலைக்குச் செல்ல வேண்டும் என்று நிர்ப்பந்திக்கிறது; ஆனால் அவர்க ளுக்குக் கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகையை கொடுக்க வேண்டும் என்று அர சாங்கத்தை நிர்ப்பந்திப்பது இல்லை. இப்ப டித்தான் இன்றைக்கு நீதித் துறை உள்ளது.  மோடியும், அமித்ஷாவும் மதக் கலவ ரங்களை ஏவுவதன் மூலமாக தங்களுடைய ஆட்சி, அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் இலங்கைத் தமிழர்களையும், இஸ்லா மியர்களையும் ஒதுக்கிவைத்துவிட்டு கொண்டு வரப்பட்டுள்ளது. காஷ்மீரில் 370 ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்துள்ள தன் மூலம் அங்கு வசிக்கும் மக்களின் உரிமை கள் பறிக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆறு மாத கால மாக வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர்.  நாடு பெரும் பொருளாதார நெருக்கடி யை சந்தித்து வருகிறது பாஜக அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி போன்ற வைகளால் சிறு-குறு தொழில்கள் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. வேலையில்லா திண்டாட்டம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதி கரித்துள்ளது. இதைப்பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். மாநிலப் பொதுச் செயலாளர் என். முத்து அமுதநாதன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் மதுரை மக்களவை உறுப்பி னர் சு.வெங்கடேசன், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தி னர். மாவட்டத் தலைவர் ஆர். சுப்புராஜ், மாநில துணைத் தலைவர் வி.ராஜ மணிக்கம், மாநிலச் செயலாளர்கள் வி. மதி, எல்.ஷாஜிசெல்லன் மதுரை வழக்கறி ஞர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.நெடுஞ்செழி யன், செயலாளர் எஸ்.மோகன்குமார், மாவட்டச் செயலாளர் எம்.ராமசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;