tamilnadu

img

மனிதச் சங்கிலி இயக்கம் மகத்தான வெற்றி

தமிழக வரலாற்றில் ஒரு புதுமை

சென்னை, ஜன. 31- மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய  குடிமக்கள் பதிவேடு ஆகிய மும்  முனைத் தாக்குதலை கண்டித்து  தமிழக மக்கள் ஒற்றுமை மேடை  சார்பில் ஜன.30 அன்று சென்னை யில் துவங்கி குமரி வரைக்கும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா, தலைநகர் மற்றும் பல பேரூராட்சிகளிலும் தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற மனிதசங்கிலி இயக்கம் மகத்தான  வெற்றி பெற்றுள்ளது. தமிழக போராட்ட வரலாற்றில் இது ஒரு  புதுமை.

குறிப்பாக, சென்னை நகரில் 37 கிலோ மீட்டருக்கு மேல் பல தரப்பு மக்களும் பங்கு கொண்ட இந்த மனித சங்கிலி இயக்கம் பல இடங்களில் மனிதச் சுவராக  நின்று காட்சியளித்த நிகழ்ச்சி சென்னை நகரம் இதுவரை காணாத காட்சியாகும். இதேபோல் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நீண்ட நெடிய மனிதசங்கிலி இயக்  கங்கள் நடைபெற்றுள்ளது. தமிழ கம் முழுவதும் சுமார் 40 லட்சம்  பேர் இந்த மனித சங்கிலி இயக்கத்  தில் பங்கு கொண்டுள்ளனர். இந்த இயக்கத்தின் வெற்றி  குறித்து அறிக்கை வெளியிட்டி ருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை  மேடையின் ஒருங்கிணைப்பாளர் கள் பேரா. அருணன், க.உதய குமார், “ மனித சங்கிலி இயக்கத்  தில் அரசியல் கட்சியின் தலை வர்கள், ஊழியர்கள், கட்சி சார்பற்ற பல்வேறு பிரபலங்கள், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள், கட்சி சார்பற்ற பல் வேறு நிறுவனங்கள், மாணவர், வாலிபர், மாதர் அமைப்புகள், மனித உரிமை இயக்கங்கள், கல்வியாளர்கள், அரசு சாரா நிறுவனங்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், வியாபார பிர முகர்கள், மருத்துவர்கள் உள்  ளிட்ட சமுதாயத்தின் அனைத்துப்  பகுதி மக்களும் இந்த பேரி யக்கத்திற்கு ஆதரவு அளித்து கலந்து கொண்டுள்ளனர். அவர் கள் அனைவருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் நெஞ்சார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்  கொள்கிறோம். 

சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., மற்றும் என்.ஆர்.சி., ஆகியவற்றிற்கு எதி ரான இந்த எழுச்சிமிக்க மகத்தான  போராட்டத்தை கண்டாகிலும் மத்திய, மாநில அரசுகள் இவற்றை கைவிட வேண்டுமென தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு தெரிவித்திருக்கி றார்கள்.

;