tamilnadu

img

தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக மிக அதிகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 28- தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு  அரசு முறைபயணம் மேற்கொண்டுள்ளார்.  சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு  தற்போது ஜப்பானில் அரசு முறை பயணம்  மேற்கொண்டு வருகிறார்.  அதன் தொடர்ச்சியாக ஞாயிறன்று (மே 28)   டோக்கியோவில், ஜப்பான் வாழ் தமிழர்கள் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி யில், ஜப்பான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழ்  பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றும் வகையில்  நடைபெற்ற தமிழர் தற்காப்புக் கலையான வர்மக்கலை, பரதநாட்டியம், மிருதங்க இசை  நிகழ்ச்சி, சிலம்பாட்டம், மயிலாட்டம், கும்மி யாட்டம், தப்பாட்டம் போன்ற நிகழ்ச்சிகளை தமிழ்நாடு முதலமைச்சர்  பார்வையிட்டார்.  இதனைத் தொடர்ந்து, ஜப்பான் நாட்டில்  தமிழ் பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர்  சான்றிதழ்களையும், ஜப்பான் தமிழ்ச் சங்கங்க ளின் சார்பில் நடைபெற்ற பல்வேறு விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்க ளுக்கு பரிசுகளையும் வழங்கினார்.  இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ் இணைய கல்வி கழகத்தின் மூலம் வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகள் தமிழ்ச் மொழியை கற்றுக் கொள்ளும் வகை யில் ஜப்பானில் உள்ள வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர் சங்கம் மற்றும் ஜப்பான் தமிழ்ச் சங்கம் ஆகிய சங்கங்கள் தமிழ்நாடு அரசுடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதன் பின்னர் பேசிய முதல்வர் ஸ்டாலின், ஜப்பான் - தமிழ் மொழிகளுக்கு ஒரே மாதிரியான இலக்  கண கட்டமைப்பு உள்ளது என்று அறிஞர்கள் கூறுவார்கள் என்றார்.  தமிழ்நாட்டுக்கும் ஜப்பானுக்குமான தொடர்பு மிக மிக அதிகம் என்றும் கூறினார்.

;