tamilnadu

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

பாஜக ஆட்சியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற கூட்டணிக் கட்சிகள் தங்களது மாநிலங்களின் நலன்களை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று கருதுகின்றன. ஆனால் நாசகரப் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றி வருகிற மோடி அரசு ஏற்கெனவே இந்தியப் பொருளாதாரத்தை சிதைத்து அழித்துக் கொண்டிருக்கிறது; மக்களின் வாழ்வாதாரங்களை நொறுக்கிக் கொண்டிருக்கின்றது. மோடி பின்பற்றுகிற இந்தப் பொருளாதாரத்திற்கு “மோடினாமிக்ஸ்” என்று பெயரிட்டிருக்கிறார்கள். 2015-16இல் இந்திய நாட்டின் ஏராளமான முறைசாரா தொழில்கள் மற்றும் சிறு-குறு, நடுத்தர தொழிற்துறையில் பணியாற்றி வந்த தொழிலாளர்கள் 11.13 கோடிப் பேர். இந்த எண்ணிக்கை 2021-22இல் 9.97 கோடியாக வீழ்ச்சியடைந்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, திட்டமிடாத தேசிய ஊரடங்கு ஆகியவற்றால் கோடிக்கணக்கான வேலைகள் பறிபோயுள்ளன. அந்தத் தொழிலாளர்களின் கதி என்ன என்பது பாஜக கூட்டணிக் கட்சிகளுக்கு தெரியுமா?