tamilnadu

தென்காசி மற்றும் தூத்துக்குடி முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்தில் கொரோனா தொற்று இல்லை : 2 பேர் டிஸ்சார்ஜ்

தென்காசி, மே 29- தென்காசி மாவட்டத்தில்  கொரோனா தொற்று இல்லை. கொரோனாவாவால் பாதிக்கப்பட்டவர்களில் இருவர் பூர்ண குணமானதால்  அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தென்காசி மாவட்டத்தில் இதுவரை 5562 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில்  85 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் இருவர் பூர்ண குணமானதால் அவர்கள் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது வரை 59 பேர் குணமாகி மருத்துவமனையில் இருந்து தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.  யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட வில்லை. இதனால் தென்காசி மாவட்ட மக்கள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து 1180 பேர்களும், சென்னையிலிருந்து 726 பேர்களும், சென்னை தவிர மற்ற மாவட்டங்களிலிருந் து 995 பேர்களும் வந்துள்ள னர். அரசு தனிமைப்படுத்தும் முகாம்களில் 166 பேர்கள்  உள்ளனர். 2735பேர் தங்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.

பெண்ணின் கணவர் மீது தாக்குதல்:  மகளிர்குழு தலைவியின் கணவர் மகன்கள் கைது

தூத்துக்குடி,மே 29-  தூத்துக்குடியில் மகளிர் சுய உதவிக்குழு கடன் விவகாரத்தில் பெண்ணின் கணவரை தாக்கிய மகளிர் குழு தலைவியின் கணவர், மகன்களை காவல்துறை யினர் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, தெர்மல் நகர் கோவில்பிள்ளை நகரைச் சேர்ந்தவர் இருளாண்டி (46). இவரது மனைவி மாரி யம்மாள் (40)  மகளிர் சுய உதவிக்குழு தலைவியாக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டியன் மனைவி திருக்கம்மாள் என்பவர் அந்த குழுவில் உறுப்பினராக உள்ளார். குழுவில் வாங்கிய கடனுக்கான தவணை யாக ரூ.2572ஐ அவர் மாரியம்மாளிடம் கொடுத்தா ராம். ஆனால் அவர் அந்த பணத்தை வங்கியில் செலுத்த வில்லையாம். இதையடுத்து திருக்கம்மாள், மாரியம்மாளின் வீட்டிக்கு சென்று கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த மாரியம்மாளின் கணவர் இருளாண்டி, மற்றும் மகன்கள் சதீஷ் (27), முத்துராமலிங்கம் (24) ஆகிய 3 பேரும் திருக்கம்மாளின் வீட்டிற்கு சென்று அவரது கணவர் தங்கபாண்டியனை சராமாரியாகத் தாக்கி னாரா்களாம். இதில் காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதுகுறித்து தெர்மல் நகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் திருமலை முருகன் வழக்குப் பதிந்து, இருளாண்டி மற்றும் அவரது மகன்கள் 2பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

காயாமொழியில் குறைந்த அழுத்த மின்சாரம்

தூத்துக்குடி,மே 29 - தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் நிலவும் மின்சார பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகா, காயாமொழி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள், காயாமொழி இளநிலை மின்பொறியாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,    எங்கள் ஊரில் மின்சாரம் சீராக இல்லாமல் சப்ளை செய்யப்படுகிறது. அதனால் மோட்டார், மின்சாதனங்கள் அடிக்கடி பழுதடைகிறது. அதனால் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகின்றனர்.  கடந்த 28.4.2017-ல் மின்சார சப்ளையில் உள்ள பிரச்னை குறித்து புகாரளித்துள் ளோம். அந்த மனுவையடுத்து புதிய மின்மாற்றிகள் வைக்க ஏற்பாடு செய்துள் ளோம்.

அதனால் இந்தப் பிரச்னை சரியாகிவிடும் எனக்கூறினர் ஆனால் இன்றுவரை மின்மாற்றிகள் அமைக்கப்படவில்லை. அதனால் தொடர்ந்து மின்சப்ளை சரியில்லாத காரணத்தால் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறோம். தற்போது கோடை வெயில் சுட்டெரிப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை சிரமப்பட்டு வருகின்றனர். மழைகாலத்தில் மழை பெய்த அடுத்த சில நிமிடங்களில் மின்தடை ஏற்படுகிறது. குறைந்த அழுத்தம், மிகை அழுத்தம் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு முதல்வர், மின்சார துறை, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், சென்னை மின்வாரிய தலைமை அலுவலகம், திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர், தூத்துக்குடி மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர், திருச்செந்தூர் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், காயாமொழி ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவை மீறிய  2974 பேர் கைது

தென்காசி ,மே 29- தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 2148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2974 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் 8568 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனோ வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித் துள்ளது. 144 தடை உத்தரவை மீறிய வகையில் இதுவரை 2148 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2974 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.மேலும் 8568 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பைக் மீது கார் மோதி விபத்து: ஒருவர் பரிதாப சாவு

தூத்துக்குடி,மே 29 - தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வேலுச்சாமி (21), விவசாயி. இவர் தனது மோட்டார் பைக்கில் தூத்துக்குடி - எட்டயபுரம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த கார், பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து எப்போதும் வென்றான் காவல் ஆய்வாளர் கலா வழக்குப் பதிந்து, காரை ஓட்டிவந்த கோவில்பட்டி மந்திதோப்பைச் சேர்ந்த முனியசாமி மகன் பாலாஜி (40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவோடு இரவாக கால்வாய் பணிகள் சீரமைப்பு 0 தூத்துக்குடி மாநகராட்சிக்கு பொதுமக்கள் நன்றி 

  தூத்துக்குடி,மே 29  தூத்துக்குடி அண்ணாநகரில் கழிவுநீர் கால்வாய் பணிகள் முடிவடைந்த பின்னரும் தோண்டிய சாலையை சீரமைக்காமல் இருந்த நிலையில் வியாழனன்று இரவோடு இரவாக அந்த பணிகள் முடிவடைந்து சாலை சீரமைக்கப்பட்டது. தூத்துக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான அண்ணாநகரில் 1 முதல் 12வது தெரு வரை கழிவுநீர் கால்வாய்  அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்து அதற்காக தோண்டிய மண், கற்கள் அப்படியே போடப் பட்டது. தெருக்களுக்குள் செல்லும் சாலையை சரி செய்யாமல் அப்படியே விட்டு விட்டதால் அண்ணாநகர் 7,9,12 ஆகிய தெருக்களில் வசிப்பவர்களும், இந்த தெருக்கள் வழியே மில்லர்புரம்,ராஜீவ்நகர், ஹவுசிங் போர்டு செல்வோரும்  சுற்றி சென்றனர். மேலும் தெருவின் குறுக்கே பெரிய கான்கிரிட் தளம் உள்ளதால் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் இருந்தது. இது குறித்து அறிந்ததும் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் இரவோடு இரவாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று சாலையின் குறுக்கே கிடந்த கான்கிரிட் தளத்தை அகற்றினர். மேலும் மெயின் ரோட்டிலிருந்து தெருவிற்குள் செல்லும் சாலையையும் முழுவதுமாக சீரமைத்தனர். உடனே நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.