tamilnadu

img

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு பரவலாக மழை வாய்ப்பு

சென்னை, செப். 18- தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, செப்.19 அன்று  தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால்  பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.20 ஆம் தேதி முதல் செப்.21 ஆம்  தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. செப்.22 ஆம் தேதி முதல் செப்.24 ஆம்  தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும்  காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை பெய்ய  வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.