tamilnadu

img

கற்சிற்பங்களின் கலைக்கூடம் ! - சி.ஸ்ரீராமுலு

தமிழ்நாட்டில், கண்டுகளிக்க எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன. அவற்றில், வரலாற்றுச் சம்பவங்களை அறிந்து கொள்ளவும், மிகப் பழமையான நகரங்களில் ஒன்றை தெரிந்து கொள்ளவும் நினைப்பவர்களுக்கு சென்னைக்கு அருகில் உள்ள இடங்களில் மிக முக்கியமானது மாமல்லபுரம். குடைவரை, ஒற்றைக்கல் கோயில்கள், கட்டுமானங்கள், சிற்பங்கள் என நான்கு வகையான சிற்பக்கலை வடிவமைப்புகளை ஒரே நகரில் காண முடியும் என்றால் அந்த ஒரே இடம் மாமல்லபுரம் தான்.

தற்போதைய செங்கல்பட்டு மாவட்டம்,  திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்துள் ளது மாமல்லபுரம் என்று அழைக்கப்படும் மகாபலிபுரம், முதலாம் நூற்றாண்டு முதல் கி.பி. 140 வரைக்கும் ஒரு புகழ்பெற்ற துறை முக நகரமாக இருந்துள்ளது. பல்லவ வம்ச ஆட்சியின் கீழ் இருந்த, இந்த நகரத்தில் உள்ள  பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டுகளில் மகேந்திர வர்மன், நரசிம்மவர்மன் ஆகியோரால் நிறு வப்பட்டதாகும். சென்னையிலிருந்து 50 கி.மீ. தெற்கே  அமைந்துள்ள இந்த நகரம் தொல்பொருள் அதிசயங்கள் உள்ள பழைய கடற்கரை நகர மாகும். கடலோர உணவு வகைகளுக்கும் பெயர் பெற்றது. ‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் கொண்ட நரசிம்மவர்மனின் மனதில் உதித்து எழுந்தது தான் இந்த சிற்பக் கலைக்கூடம்.

கட்டடக்கலைகளின் சான்றுகள்!

வங்கக் கடலின் கரையை கண்டும் காணா ததுமாக 45 அடி உயரம் கொண்டது கடற்கரை  கோவில். 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த  கிரானைட் கற்களால் கட்டப்பட்ட இதன் கட்டி டம் பல்லவ மன்னனின் ஆட்சிக் காலத்தை பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 பிரதான சின்னங்களில் இதுவும் ஒன்று. கட்டடக் கலையின் திறமைக்கு சான்றாக அமைந்திருக்கும் இந்த கோவில் இன்றும் பல்லவ வம்சத்தின் கலைப் பொரு ளாக போற்றி பாதுகாக்கப்பட்டு வரு கிறது. நமது பாரம்பரிய நடன கலை களை ஊக்கப்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இந்தக் கோவி லின் பின்புறம் தான் நாட்டிய விழா  நடத்தப்படுகிறது. கடலில் மூழ்கிப் போன கோவில்  களில் மீதி இருக்கும் கடைசி கோயில்  இதுதான். 2004 ஆம் ஆண்டு இந்திய பெருங்  கடலை தாக்கிய சுனாமிப் பேரலை, சோழ மண்டல கடற்கரையையும் விட்டு வைக்கவில்லை. மாமல்ல புரத்தில் கடல் நீர் சுமார் 500 மீட்டர்  வரை உள்வாங்கியது. அன்றைக்கு கடலில் மூழ்கிப் போன எஞ்சிய கோயில்களின் அமைப்புகள் வெளி யில் தெரிந்தன. கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டு  சிதைந்து போனதும், யானைகள் சிங்கங்கள், மயில் சிற்பங்களும் காணப்பட்டன. சுனாமி அலையில் மாமல்லபுரம் கோவில் தாக்குப் பிடிப்பதற்கு முக்கிய காரணம் கருங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட அடித் தளமே ஆகும். அடுத்து, கல்லில் கலைநயத்து டன் தென்னிந்திய சிற்பக் கலைக்கு  எடுத்துக்காட்டாக வடிவமைக்கப் பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் அர்ச்சுனன், தர்மன், நகுலன், சகா தேவன், பீமன் ஆகிய ஐந்து ரதங்கள்  கட்டிடக்கலைக்கு இன்றும் சிறந்த எடுத்துக்காட்டாகும். கலை நயத்துடன் தெற்கு நோக்கி  நிற்கும் பிரம்மாண்ட யானை, வடக்கு  நோக்கிய  சிங்க சிற்பம், தஞ்சை பெரிய கோவிலை போன்றே கிழக்கு நோக்கி 20 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நந்தி சிலையும் நமது கலைகளுக்கு சின்ன மாகத் திகழ்கிறது. சீன ஜனாதிபதி ஜின்பிங், இந்திய  பிரதமர் மோடி ஆகியோர் வரு கைக்குப் பிறகு, சுற்றுலா பயணி கள் பொழுதை போக்குவதற்கு ஐந்து ரத்தின் கிழக்கு மற்றும் தெற்கு திசையில் அழகிய புல் வெளி களுடன் கூடிய பசுமை பூங்காக்கள் புதுப்பொலிவு பெற்றுள்ளன.

புகழ் சேர்க்கும் சிற்பங்கள்!

நகரின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் பேருந்து நிலை யம் அருகில் சுமார் 100 அடி நீளம்,  50 அடி உயரம் கொண்ட இரண்டு  பெரிய திறந்தவெளி பாறை சிற்பங்களில் நாட்டார் தெய்வங்கள், மனிதர்கள், நாக கன்னிகை, ஒற்றைக்கல் யானை, மிகப்பெரிய சிங்கத்தின் வேலைப்பாடுகளுடன் கூடிய தூண்கள். சிங்கம், புலி, சிறுத்தை, மான், குரங்கு, பூனை,  உடும்பு,பறவைகள் என வகைப் படுத்தி ஏராளமான சிற்பங்கள் உயிர்  உள்ளவை போல் செதுக்கப்பட் டுள்ளன. ஒற்றைக் காலில் நின்றபடி தவ மிருக்கும் ஒரு மனித உருவம் கொண்ட இந்த இடம் ‘அர்ஜூனன் தபசு’ என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கலைச் சிற்பங்கள் பல்ல வர்கள் இந்த உலகிற்கு அளித்த  கொடை என்றால் அது மிகையா காது. இந்த பாறைச் சிற்பங்களுக்கு அருகில் நமது மரபுச் சின்னங்கள், பஞ்சபாண்டவர் மண்டபம் என்றும்  குகைக் கோவில் என்றும் அழைக் கப்படும் சிற்பங்கள், தூண்கள் கட்டி டக் கலையின் திறமைக்குச் சான்றாக அமைந்திருக்கிறது. மாமல்ல புரம் குகைக் கோயில்களில் மிக நீண்டது இதுதான். சுமார் 50 அடி அளவை கொண்டதாகும்.

வியக்க வைக்கும் உருண்டைக் கல்!

மாமல்லபுரம் வருகை தரும்  சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துவது, 45 டிகிரி சாய்வு பாறை சமதளத்தில் எந்த விதமான பிடிப்பும் இல்லாமல் நிற்பதாகும். இந்த பாறைக் கல் உருண்டை (வெண்ணைப் பந்து) சுமார் 5 மீட்டர்  விட்டமும், 6 மீட்டர் உயரமும், 250 டன்  எடையும் கொண்டது. இது இயற்கையான உருவாக்கம் என்பது   புவியியல் விஞ்ஞானிகளின் கருத்தா கும். பாறாங்கல் சரிவதை தடுப்பது  உராய்வு  ஆகும்.  நாம் சறுக்கும் தரையில் நிற்கும் போது எப்படி இருக்குமோ அது போலவே இந்தப்  பாறையும் நிற்கிறது. இது மட்டுமின்றி, தொல்லியல் துறையின் பராமரிப்பில் அழகுக்கு அழகு சேர்க்கும் பசுமை நிறைந்த பசுமை பூங்காக்கள், சற்று தூரத்தில் புலிக் குகைகள், கலங்கரை விளக்கம், நீண்ட கடற்கரைப் பகுதி, சாகசப் பிரியர்களுக்கு  சர்ஃபிங் என ஏராளமான சிறந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளன. பல வருடங்கள் கழித்தும் கூட  இந்த நகருக்கு சென்றாலும் பழங்கால ராஜ்ஜியங்களின் பெரு மையை பிரதிபலிக்கும் கட்டிட கலைகள், அழகிய கடற்கரைகள், கற்களை எல்லாம் கவின்மிகு கலை யாக்கிய நமது தமிழர்களின் செழு மையும் பாரம்பரியமும் கொண்ட கலாச்சார பெருமையை உலகுக்கு உணர்த்திச் சென்றவர்கள் பல்லவ  மன்னர்களின் கலைக் கரு வூலங்களாக விளங்கும் மாமல்ல புரம் நகரம் நம் பண்பாட்டுச் சின்ன மாகும்.