tamilnadu

img

வழக்கறிஞர் சங்க தமிழ் மாநில மாநாடு திருப்பூரில் கோலாகலமாக தொடங்கியது

திருப்பூர், டிச.17- அகில இந்திய வழக்கறிஞர் சங்  கத்தின் தமிழ்நாடு மாநில 12 ஆவது  மாநாடு திருப்பூரில் சனியன்று  கோலாகலமாக தொடங்கியது. மாநாட்டு துவக்க நிகழ்ச்சியின் போது அரசியல் சாசன பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. திருப்பூர் தியாகி குமரன் சிலைக்கு வழக்கறிஞர் சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் பி.வி.சுரேந்திரநாத் மற்றும் வர வேற்புக்குழு தலைவர் ஏ.சின்னச்  சாமி ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செய்தனர். இதைத்தொடர்ந்து மாநில துணைத் தலைவர் வ.ராஜமாணிக்கம், “அர சியல் சாசனத்தை பாதுகாப்போம்” என்ற உறுதிமொழியை முன்  மொழிய, பிரதிநிதிகள் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இதைத் தொடர்ந்து தியாகி குமரன் நினை வகம் முன்பிருந்து மாநாடு நடை பெறும் தோழர் பி.சுப்பையா வளா கத்திற்கு (ஹார்வி குமாரசாமி திரு மண மண்டபம்) அனைவரும், “அர சியலமைப்புச் சட்டத்தை பாது காப்போம், நீதித்துறை சுதந்தி ரத்தை பாதுகாப்போம்,

வழக்கறி ஞர் நலனை பாதுகாப்போம்” என்ற முழக்கங்களை எழுப்பியவாறு, பேரணியாக சென்றனர். மாநாட்டு வளாகத்தில் தோழர்  எஸ். ராமசுப்பிரமணியன் நினைவு  அரங்கில், மாநில துணைத்தலை வர் ஆர்.ராமமூர்த்தி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். மாநிலச் செயலாளர் ஏ.மணவாளன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார். வர வேற்புக்குழு தலைவர் ஏ.சின்னச் சாமி வரவேற்புரை ஆற்றினார். மாநி லத் தலைவரும், மூத்த வழக்கறிஞ ருமான என்.ஜி.ஆர்.பிரசாத் மாநாட்டுக்கு தலைமை வகித்து, உரையாற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்க டேசன் மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அகில இந்திய பொதுச்செயலாளர் பி.வி.சுரேந்திரநாத், தென்பிராந்திய குழு ஒருங்கிணைப்பாளர் எச்.வி. ராமச்சந்திர ரெட்டி, மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம், கேரள மாநிலச் செயலாளர் சி.பி.புரமோத் ஆகியோர் உரையாற்றினர்.

முன்னதாக, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன் சாரி, வழக்கறிஞர்கள் சங்கத்தின் அகில இந்திய தலைவர் பிகாஸ் ரஞ்சன் பட்டாச்சார்யா எம்.பி., ஆகி யோர் அனுப்பியிருந்த மாநாட்டு வாழ்த்துச் செய்திகளை மாநில துணைத்தலைவர் கே.இளங்கோ வாசித்தார். இதைத்தொடர்ந்து பொது மாநாடு நிறைவடைந்தது.

கண்காட்சி

மாநாட்டு வளாகத்தில் அகில  இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் வர லாறு மற்றும் செயல்பாடுகள் குறித்த கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. அத்துடன் சட்டப் புத்தகங்கள் உள்ளிட்ட புத்தக விற்பனை  அரங்குகள் அமைக்கப்பட்டிருந் தது. மாநாட்டிற்கு வந்திருந்த அனைவரும் ஆர்வமுடன் கண் காட்சியை ரசித்தனர். பிரதிநிதிகள் மாநாடு பிரதிநிதிகள் மாநாட்டில் மாநில  பொதுச்செயலாளர் என்.முத்து  அமுதநாதன் அறிக்கை சமர்ப்பித் தார். மாநிலப் பொருளாளர் எஸ்.சிவக்குமார் வரவு - செலவு அறிக்  கையை முன்வைத்தார். இதைத் தொடர்ந்து பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது. மொத்தம் பெண்கள் 45 பேர் உட்பட, 400க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மற்றும் பார்வையா ளர்கள் கலந்து கொண்டனர். ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெறும் இம்மாநாடு, புதிய நிர்வாகிகள், மாநிலக் குழு தேர்வு டன் நிறைவு பெறுகிறது.

கருத்தரங்கம்

இதன்பின் சனியன்று மாலை  வழக்கறிஞர் எஸ்.சாமிநாதன் நினை வரங்கில் மாநில துணைத்தலைவர் ஜி.சம்கிராஜ் தலைமையில் கருத்த ரங்கம் நடைபெற்றது. தேசியக் குழு உறுப்பினர் எஸ்.பொன்ராம் வரவேற்றார். “இந்திய ஒன்றி யத்தின் வேர்களும், தூண்களும்” என்ற தலைப்பில் பேராசிரியர் ஏ. கருணானந்தன், கூட்டாட்சியே நாட் டின் நல்லாட்சி என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் ஆகி யோர் கருத்துரையாற்றினர். வழக்க றிஞர் சங்க மாவட்டத் தலைவர் கே. சுப்பராயன், சகோதர சங்கங்க ளின் நிர்வாகிகள் எம்.பழனிச்சாமி, பி.சிவப்பிரகாசம், கே.எஸ்.ராஜேந் திரன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கருத்தரங்கில் பெருந்திரளானோர் கலந்து கொண்  டனர். நிறைவாக வரவேற்புக்குழு பொருளாளர் ஓ.உதயசூரியன் நன்றி கூறினார்.