tamilnadu

இந்தியாவை தகர்க்கும் வகுப்புவாதிகள்

திருச்சூர், அக். 6- நாட்டின் பன்மைத்துவத்தையும் மதச்சார்பின்மையையும் அழிக்கும் வகுப்பு வாதிகளின் நடவடிக்கை இந்தியாவை தகர்க்கும் நோக்கம் கொண்டது என்று  சாகித்ய அகாடமி தலைவர் கே.சச்சி தானந்தன் கூறினார். திருச்சூர் கால்டியன் சென்டரில் பாலர் சங்கத்தின் 6ஆவது மாநில பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கி வைத்து சச்சிதானந்தன் மேலும் பேசுகையில், தொடர்ச்சியான போராட்டத்திற்குப் பிறகு ஆங்கில ஏகாதி பத்தியத்திடம் இருந்து இந்தியா விடுதலை பெற முடிந்தது. சுதந்திரப் போராட்ட காலத்தில் துரோகம் செய்தவர்களின் வாரிசுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் இன்று ஆட்சியில் இருக்கிறார்கள்.

ஒடுக்கப்பட்ட, குரலற்றவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பவர்களே உண்மையான தலை வர்கள். குடியரசு என்பது கீழ்மட்டத்தில் இருந்து முடிவெடுப்பது. ஜனநாயக அரசு என்பது மேலிருந்து கீழாக உத்தரவு பிறப்பிப்பதல்ல. இந்தியா உருவானது சமஸ்கிருத வேதங்களிலிருந்து மட்டுமல்ல. நாடு என்பது பழங்குடியினர், நாடோடிகள், பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள் போன்றவற்றின் கலவையாகும். தேசத்தின் குரல் கேட்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும்போதுதான் ஜனநா யகம் அர்த்தமுள்ளதாக இருக்கும். இந்தியா  ஒரு இந்து நாடு என்பது உண்மையல்ல. பல தரப்பட்ட சமூகமும் கலாச்சாரமும் இந்திய ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு. ஆனால், இன்று வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் பார்வைக்கு சவால் விடும் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கான எதிர்ப்பை அகற்றுவதற்கான முடிவுகள் ஆட்சி யாளர்களால் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாய சட்டம், கல்வி சீர்திருத்தங்கள், குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை செயல்படுத்துவதை நோக்கமாக ஆட்சி யாளர்கள் கொண்டுள்ளனர். இதற்கு ஆதர வாக ஊடகங்களும் செயல்படுகின்றன என்றார். மேலும் அவர் பேசுகையில், வளரும்  தலைமுறையாக, குழந்தைகள் குழு உறுப்பினர்கள் அதிகம் படித்து, கற்று, அறிவியல் சிந்தனையை தீவிரமாக பரப்ப வேண்டும். இந்த சூழ்நிலையை உணர்ந்துள்ள தலைமுறை என்கிற வகையில் பாலர் சங்க குழந்தைகள் கூடுதல் வாசிப்பும், கல்வியுடன் அறிவியல் சிந்தனை களை பரப்பும் பணியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

;