tamilnadu

img

சின்னக் கண்ணா வாடா! - ப.முருகன்

சின்னக் கண்ணா வாடா
செவ்வாய் முத்தம் தாடா
உண்ணச் சோறு தந்தால் 
உண்டு விட்டுப் போடா!

செல்லக்கண்ணாவாடா
சிரித்து மகிழ வாடா
மெல்லக்கண்ணை மூடி
மேனியில் படர வாடா!

உள்ளம்களிக்க நல்பாட்டு
ஊக்கம் அளிக்கும் விளையாட்டு
கள்ளம் இல்லா நட்பால் 
கலந்தே திளைத்து வாடா!

பள்ளிப்பாடம் படிப்பாய்
வீட்டுப்பாடம் முடிப்பாய்
இல்லம் மகிழ்ச்சிகாணும்
உள்ளம் மலர்ச்சியாகும்!

எல்லாப் பேரும் இணைந்தே
நல்லா வாழ்ந்திட வேணும். 
உள்ளான் இல்லான் பேதம்
 இல்லாமல் ஆக்கிட வேண்டும்!

எல்லாரும் எல்லாமும் பெற்று
இனிதாக வாழ்ந்திட வேணும்
செம்மையாய் ஆக்கிட வேண்டும்
சிங்காரக் கண்ணா வாடா !