tamilnadu

img

மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும்

புதுதில்லி, ஜன. 28 - 2022 ஒன்றிய அரசின் பட்ஜெட் மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் விதத்தில் அறிவிப்புகளை கொண்டுவர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  2022-23 ஒன்றிய அரசின் பட்ஜெட் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட உள் ளது.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடா ளுமன்ற பட்ஜெட் தொடர் ஜனவரி 31 அன்று துவங்குகிறது. பிப்ரவரி 1 அன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த பட்ஜெட் எப்படி இருக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி டுவிட்டரில் பதிவு  வெளி யிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மக்களிடம் வாங்கும் சக்தி இல்லாததால் பொருளாதாரம் சரிந்து கொண்டுள்ளது. இதனால் நமது பொரு ளாதாரம் மந்த நிலையில் மூழ்கி திணறும் நிலை உருவாகும்.  இதனை எதிர்கொள்ள பட்ஜெட்

  •     பொது முதலீடுகளை பெரிய அளவுக்கு அதிகரித்தல்  
  •     அதன் மூலம் உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் u    அதன் விளைவாக வேலை வாய்ப்புகளை பெருக்குதல்

    மக்கள் வாங்கும் சக்தியை உயர்த்து தல் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இந்த நிதியாண்டு இறுதிக்குள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு தரவேண்டிய நிலுவை தொகை ரூ.21,000 கோடியை எட்டும். இந்த நிலுவை தொகை முழுவதும் பட்ஜெட்டில் தரப்பட வேண்டும். இந்த  திட்டத்துக்கு குறைந்தபட்சம் 2.6 லட்சம்  கோடி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். மோடி அரசாங்கம் வேலை  வாய்ப்புகளை உருவாக்க தவறியதால் கோடிக்கணக்கானவர்களுக்கு இந்த திட்டம் ஒன்றுதான் உயிர்வாழஉதவுகிறது. நகர பகுதிகளுக்கும் இத்தகைய திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்திய இளைஞர்களின் வேலை வாய்ப்பு மிக மோசமான நிலைக்கு சென்றி ருக்கிறது. 20 கோடி வேலைவாய்ப்புகள் இந்திய பொருளாதாரத்திலிருந்தே காணா மல் போயிருக்கின்றன என்ற அதிர்ச்சிகரத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பட்ஜெட்டின் பிரதான கவனம் இதில் குவிக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

;