திருச்சூர், ஜுன் 12- நவகேரள உருவாக்கத் தில் உந்து சக்தியாக இருந்த இ.எம்.எஸ்.சின் பங்க ளிப்பை புதிய தலைமுறை க்கு எடுத்துச் செல்லவும், ஜனநாயகம், கூட்டாட்சி, நீதி ஆகிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் 26ஆவது இஎம்எஸ் நினைவு தேசிய கருத்த ரங்கு ஜுன் 13, 14ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வியாழனன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து சிபிஎம் மாவட்டச் செயலாளர் வர்கீஸ் செய்தியாளர் சந்திப்பில் மேலும் கூறியதாவது: இரண்டு நாள் இ.எம்.எஸ் நினைவு கருத்தரங்கம் ரீஜினல் தியேட்டரில் நடை பெறுகிறது. மார்க்சிய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அரசியல் பிரச்சனைகளை இந்த கருத்தரங்கம் ஆய்வு செய்யும். காஸ்ட்போர்ட் என்னும் அமைப்புடன் பல்வேறு வெகுஜன அமைப்புகள் இணைந்து இந்த கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளன. பிரமுகர்கள் பல்வேறு தலைப்புகளில் பேச உள்ளனர். முதல் நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பினோய் விஸ்வம், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, பேரா சிரியர். பிரபாத் பட்நாயக், டாக்டர். தாமஸ் ஐசக், உ.வாசுகி, அமைச்சர் ஆர்.பிந்து, கே.அனில் குமார், டாக்டர். கே.என்.கணேஷ் ஆகியோர் பேச உள்ளனர்.இரண்டாவது நாளில், சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கள் ஏ. விஜயராகவன், பிருந்தா காரத், சிபிஎம் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன், டாக்டர். கே.ஜே.ஜோசப், பேராசிரியர்.லேகா சக்ரவர்த்தி, பி.டி.டி. ஆச்சாரி, பேராசிரியர். சி.ரவீந்திர நாத், வி.எஸ்.சுனில்குமார் ஆகியோரும் பேச உள்ளனர். தொடக்க அமர்வில் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம். ஆன்லைனிலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம். கருத்தரங்கில் கலந்து கொள்ள முன் பதிவு அவசியம். பதிவு கட்டணம் 750 ரூபாய். இவ்வாறு அவர் தெரிவித்தார். செய்தியாளர் சந்திப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.கே.ஷாஜன், காஸ்ட்போர்ட் இயக்குநர் டாக்டர். எம்.என்.சுதாகரன், ஏ.வி.ஜெகனிவாஸ், பி.பி.ராஜீவ், ஏ.கிருஷ்ணகுமாரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.