திருநெல்வேலி,அக்.22- டாக்டர் வா.செ.குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விருதுக்கு தேர்வு செய்யப் பட்டுள்ள முனைவர் கே.ஏ.மணிக்குமா ருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். டாக்டர் வா.செ.குழந்தைசாமியின் நினைவு தினத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் “டாக்டர் வா.செ.குழந்தை சாமி அறக்கட்டளை” சிறந்த ஆய்வா ளர்களுக்கு விருதினை வழங்கி வரு கிறது. இவ்விருதுக்கு லட்சம் ரூபாய் காசோலை மற்றும் பட்டயம் வழங்கிச் சிறப்பித்து வருகிறது. இந்த ஆண்டு, ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் தலை மையிலான விருதுக் குழுவினர், முனை வர் கா.அ.மணிக்குமாரை டாக்டர் வா.செ. குழந்தைசாமி தமிழ் மேம்பாட்டு விரு துக்குத் தேர்வு செய்துள்ளார்கள். இந்த விருது, 11-12-2022 அன்று நடை பெற உள்ள “டாக்டர் வா.செ.குழந்தை சாமி தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை” யின் 2022-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்களின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் விழாவில் வழங்கப்பட இருக்கிறது.
இந்த விருதைப் பெற இருக்கிற, தமி ழகத்தில் தலை சிறந்த வரலாற்று ஆய்வா ளர்களில் ஒருவரான முனைவர் கா.அ. மணிக்குமாரை அவரது இல்லத்தில் சனிக்கிழமையன்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், மாநி லக்குழு உறுப்பினர் கே.ஜி. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பெரு மாள், சுடலைராஜ் , வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ஸ்ரீராம் சிவா ஆகியோர் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். டாக்டர் கே.ஏ.மணிக்குமார் வேலூர் புரட்சி, 1930 பொருளாதார நெருக்கடி யில் தமிழகம், முதுகுளத்தூர் கலவரம் ஆகிய வரலாற்று ஆய்வு நூல்களை எழு தியவர். பல தலைசிறந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர் என்பது குறிப் பிடத்தக்கது. மேலும் விவேகானந்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகவும், ம.சு.பல்கலைக்கழக பதி வாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற வர்.