tamilnadu

img

வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலூர் மாவட்ட மூத்த தோழரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் வேலூர் மாவட்ட முன்னாள் பொதுச்செயலாளருமான தோழர் ஆர்.சாவித்திரி (வயது 80) கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவரை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர்கள் பா.ஜான்சிராணி, எஸ்.வாலண்டினா, எஸ்.டி.சங்கரி ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர். இச்சந்திப்பின் போது வேலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.நாராயணன், மாவட்டக்குழு உறுப்பினர் வி.நாகேந்திரன், வேலூர் வடக்கு தாலுகா செயலாளர் கே.பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.