tamilnadu

img

வாழை போல வாழ்வோம்!

வாழை இலையில் சோறு 
 வாயில் இனிக்கும் பாரு!
வாழைப் பூவின் வடைதான்
 வாயில் போட்டால் சுவைதான்!

வாழைத் தண்டின் பொரியல் 
 வைப்பார் காயின் அவியல்
வாழைத் தண்டு சூப்பு
 வடிந்து குறையும் கொழுப்பு!

வாழைப் பழத்தை உண்ணு
 வாய்க்கும் நலத்தை எண்ணு!
வாழைச் சருகின் கட்டு
 வழங்கும் செல்வத் துட்டு!

வாழை நாரில் பூக்கள்
 வரிசை யாகும் பாக்கள்!
வாழை அடியில் கன்றாய்
 வளர்ந்து வருமே நன்றாய்!

பந்தலில் வாழை கட்டு
 பார்க்கும் அழகைக் கூட்டு!
எந்த நாளிலும் கிடைக்கும்
 எளிதாய் வளர்ந்து படைக்கும்!

 வாழை தன்னைத் தந்து 
 வாழ்த்திக் கொடையை வளர்க்கும்! 
 வாழை போல வாழ்வோம்
 வழங்கும் நலத்தைச் சூழ்வோம்

;