tamilnadu

img

உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவுக்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை வரவேற்பு

புதுதில்லி, மே 21-  ஐபிஎஸ் தேர்வுகளில் ஊனமுற்றோருக்கு சில பணிகளில் விதிவிலக்கு அளித்திருப்பதை அரசாங்கம் மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப் பித்திருப்பதை, ஊனமுற்றோர் உரிமைக ளுக்கான தேசிய மேடை வரவேற்றுள்ளது. இதுதொடர்பாக ஊனமுற்றோர் உரிமைக ளுக்கான தேசிய மேடையின் பொதுச் செயலா ளர் முரளீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஐபிஎஸ், இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படை போன்ற சில பணிகளில் ஊனமுற்றோ ருக்கு விதிவிலக்கு அளித்து அரசு வெளியிட்டி ருந்த உத்தரவை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருப்பதை ஊனமுற்றோர் உரி மைகளுக்கான தேசிய மேடை வரவேற்கிறது.   அரசாங்கம் 2021 ஆகஸ்டில் இது தொ டர்பாக வெளியிட்டிருந்த அறிவிக்கைக்கு எதிராக ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேயணசிய மேடை உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தது.

இதன்மீதே ஏ.எம்.கன்வில் கர், அபய் எஸ் ஓகா மற்றும் ஜே.பி.பார்திவாலா  ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வாயம் இவ் வாறு இடைக்கால உத்தரவு பிறப்பித்திருக்கிறது. முழுமையாகப் போரிடத் தேவையற்ற இயல்புடைய பணிகளான மேற்கண்ட ஐபிஎஸ், இந்தியன் ரயில்வே பாதுகாப்புப் படை போன்ற பணிகளுக்கு ஊனமுற்றோருக்கு விதிவிலக்கு அளித்திருப்பதை எதிர்த்தே ஊனமுற்றோர் உரி மைகளுக்கான தேசிய மேடை இந்த ரிட் மனு வைத் தாக்கல் செய்திருந்தது. இது அரசமைப் புச்சட்டத்திற்கு எதிரானது என்றும், இது ஊன முற்றோர் உரிமைகள் சட்டத்திற்கும் எதிரான தாகும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.   மனுவின் மீது மூத்த வழக்குரைஞர் அர விந்த் பி தத்தார் வாதிட்டார். பல நாடுகளில் இப்பணிகளில் ஊனமுற்றோர் அமர்த்தப்பட்டிருப் பதை எடுத்துக்காட்டுகளுடன் அவர் வாதிட்டார். மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் முன்வைத்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், அரசு தன் உத்தரவை மறுபரிசீலனை செய்திட வேண்டும் என்று கட்டளையிட்டு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளனர். (ந.நி.)

;